| சரிந்துமிகாநிற்பவும், தண்ணிய தளிர்போன்ற அடிகளணிந்த நூபுரமும் (இடையிலணிந்த) மேகலையணியும் முழங்க நடந்துபோய் நெருங்கினர். (வி - ம்.) விலங்க - குறுக்கிட. குனித்தல் - ஈண்டுப் பிறழ்தல் மேற்று. சரண் - அடி. (227) | | மெழுகு குங்கும முலைகளான் மெலிந்திடை வருந்தத் | | | தழுவி நின்றுமா தரைத்தொழுந் தையனல் லார்கள் | | | ஒழுகு தண்ணறா மலர்த்தளிர்ப் பொறைமிக வொசிந்து | | | கொழுகொம் பூன்றிநின் றொளிர்பசுங் கொடித்திர ளொத்தார். |
(இ - ள்.) குங்குமம் பூசப்பட்ட தம்முலைகளைத் தாங்கமாட்டாமல் தமது இடை இளைத்து வருந்தா நிற்றலானே தம் மருகி னிற்கு மகளிரைச் சார்ந்து தழுவி நின்றபடி எம்பெருமானைத் தொழா நின்ற அழகுடைய மகளிர் குளிர்ந்த தேனைச் சொரியும் தமது மலரும் தளிருமாகிய சுமை மிகுதலானே வளைந்து கொழுகொம்பைப் பற்றிநின்று திகழ்கின்ற பசிய பூங்கொடித்திரளை ஒத்தனர். (வி - ம்.) மாதர் - செவிலி முதலிய ஏனை மாதர். மாதரைத் தழுவி நின்று எனமாறுக. (228) | | நிறைநெ கிழ்ந்தமை நெகிழ்ந்துவார் குழல்புற நிகழ்த்தப் | | | பொறைநெ கிழ்ந்தமை யுளங்குழைந் திடையயல் புகல | | | அறைபொ லங்கழற் றாளினா னழகெனுங் கடலில் | | | துறைக ழிந்துசெஃ றுரும்பென வுளஞ்சுலா வினரால். |
(இ - ள்.) அம்மடந்தைப் பருவத்து மகளிர் தமது நிறை கெட்ட மையைத் தமது நெடிய கூந்தல் தன் நெகிழ்ச்சியானே புறத்தார்க்குணர்த்தவும், தமது பொறுமை கெட்டுப்போனமையை இடையிலே தமது நெஞ்சங் குழைந்து புறத்தார்க்குப் புலப்படுத்தா நிற்பவும், ஆரவாரிக்கின்ற பொன் கழலணிந்த திருவடியையுடைய முருகப்பெருமானுடைய அழகாகிய பெருங்கடலின்கண் நிலைதருந் துறையைக் கடந்து அகத்தே செல்லாநின்ற துரும்பாகத் தமது நெஞ்சஞ் சுழலா நின்றனர். (வி - ம்.) குழல்நெகிழ்தல் ஒரு மெய்ப்பாடு. அறை - முழங்கும். (229) | | செய்ய பங்கயத் திருவொடு மலைத்தயாஞ் சென்றிங் | | | கைய நின்கழல் பணிதலு மவணலந் திளைக்கும் | | | வைய முண்டவன் வடிவொடு பெயர்கொடு நின்றாம் | | | கையில் வெள்வளை யாழியுங் கண்டில மென்றார். |
(இ - ள்.) மேலும் அம்மகளிர் எம்பெருமானைக் கைகுவித்துத் தொழுது "ஐயனே ! பண்டெல்லாம் திருமகளை ஒத்த அடியேங்கள் நின் திருவடிகளை யடைந்து தொழுதுணையானே அத்திருமகளின் பெண்மை நலத்தை நுகரும் திருமாலினுடைய வடிவத்தையும் பெயரையும் எய்தி |