| நின்றேம், அத்திருமாலாயபின் சங்கினையும் ஆழியையும் மட்டும் எம்பாற் கண்டிலம் அவை எம்மை நீத்தன என்றார் (வி - ம்.) மலைத்த - மூத்த, அவள் - திருமகள், வையமுண்டவன் - திருமால், முகில்போன்று ( கண் ) நீர் துளித்தலான் அவன் வடிவத்தைப் பெற்றேம் என்றார் ; மால் கொள்ளலின் - பெயரைப் பெற்றேம் என்றார், யாங்கள் திருமாலாகிய பின்னர் அவனுக்குரிய சங்கும் ஆழியும் எம்பால் இருத்தலே முறையாகவும் அங்ஙனம் இருந்திலேம் என்பார் வளையாழியும் கண்டிலம் என்றார், வளை - என்றது தங்கையினின்று கழன்ற சங்கு வளையலை, ஆழி என்றது மோதிரத்தை. (230) | | கிடைசெய் முல்லையுங் கொலைபுரி நீலமுங் கெழுமித் | | | தொடைசெய் வெய்யவே டொழிலிடை யாம்புகு தாமைத் | | | தடைசெய் மூரன்முல் லையுந்தொடை நீலமுந் தாங்கிக் | | | கடைசெய் கின்றசெவ் வேட்பெய ரடுத்ததே யெனறார். |
(இ - ள்.) சோர்ந்து கிடத்தலைச் செய்யும் முல்லை மலரும் சாக்காட்டினைச் செய்யும் நீலமலரும் ஆகிய கணைகளைத் தொடாநின்ற கொடிய வேளாகிய காமனுடைய போர்த்தொழிலிற்கு யாம் ஆளாகாத படி தடைசெய்யாநின்ற முறுவலாகிய முல்லை மலரினையும் மாலையாகிய செங்கழுநீர் மலரினையும் அணிபவனாகிய இக்பெருமானுக்குச் செவ்வேள் என்னும் அடைபுணர்த்த பெயர் பொருத்தமானதே என்றார் சில மகளிர், (வி - ம்.) கிடை - மோகமுற்றுக் கிடத்தல், மோகஞ்செய்தலும் கொலைபுரிதலும், மன்மதனுடைய மலர்க்கணைகளுள் வைத்து முல்லைக்கும் நீலத்திற்கும் உரியன. முல்லையும் நீலமும் கொண்டு செய்யும் வெய்ய வேள் கொடுமைக்கு யாமிலக்காகாகமல் முல்லையும் நீலமும் கொண்டு தடை செய்வானுக்குச் செய்யவேள் என்னும் பெயர் தகுதியுடையதே என்றவாறு. மூரலாகிய முல்லை என்க, தாங்கிக்கு - நாலாம் வேற்றுமை ஏற்ற பெயர், அடை புணர்த்தப்பட்ட செவ்வேள் என்னு பெயர் என்க: (231) | | இருகை யாற்கல வித்தொழி லியற்றலாற் றாமை | | | வருட நீவவண் குறிசெயத் தழுவவார் கலையை | | | ஒருவி யோச்சவொண் கரணங்க ளுஞற்றமுந் நாற்கை | | | பொருநி னோய்புலம் பறிதியெப் புரமதி யென்றார், |
(இ - ள்.) ,ரண்மு கைகளாற் கலவித் தொழில்களை இயற்ற மாட்டாமையானே மகளிரை மருவுங்கால் வருடவும் நீவவும் வளமுடைய குறி செய்யவும் நெடிய மேகலையை அகற்றிச் செலுசதவும் ஒள்ளிய கரண வகைகள் இயற்றவும் பன்னிருகைகளையுடையை யாகிய பெருமானே யாங்கள் இளைத்தலானே எம்முடைய வருத்தத்தினை அறிந்தருளி எம்மை உய்யக் கொள்ளுவாயாக என்று இயம்பினர். (வி - ம்.) வருடுதல் முதலியன - கலவித்தொழில். பொருநினோய் - பொருந்தப்பெற்றவனே! எப்புர - எம்மைக்காக்க. மதி - முன்னிலையசை. புலம்பு - வருத்தம். (232) |