பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1341

அரிவை மகளிர்

 அரிவை குந்தமு மதிப்புறா வருந்தவ ருளமும்
 அரிவை வன்படைத் தோற்றமா யன்மொழித் தொகையாம்
 அரிவை யென்னுமப் பெயர்தழீஇ யனங்கன்வாழ் வுயர்த்தும்
 அரிவை குந்தடங் கண்ணிய ரளவிலர் தொக்கார்.

(இ - ள்.) திருமாலுடைய வைகுந்த வாழ்க்கையினையும் ஒருபொருளாக மதித்தலில்லாத அரிய தவத்தினையுடைய முனிவர் நெஞ்சத்தையும் அரியும் கூர்மையுடைய வலிய காமனுடைய படைக்கலம் என்னும் பொருள் தோன்றி அன்மொழித்தொகை என்னும் இலக்கண அமைதி பெறாநின்ற அரிவை என்னும் அந்தப் பெயரைப் பருவப்பெயராக மேற் கொண்டு காமதேவனுடைய வாழ்க்கையை வளம்படுத்துஞ் செவ்வரி கிடந்த பெரிய கண்ணையுடைய அரிவை மகளிர் எண்ணிறந்தோர் வந்து குழுமினர்.

(வி - ம்.) அரி - திருமால். அரிவை - வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். முனிவர் உளத்தை யரியும் கூர்மையுடைய படைக்கலன் என்று பொருள் விரிக்குங்கால், அரிவை - மகளிர் பருவப் பெயரினுள் ஒன்று, அரி - செவ்வரி,

(233)

 ஆட வர்க்குமிக் கணங்குசெய் கொல்லிமால் வரையில்
 பீட மைந்தவப் பாவைபோற் பெண்பிறப் பினர்க்கு
 நீட ணங்குசெய் பாவைகொல் லோநெடுங் களிற்றில்
 பாட மைந்தொளி ருருவெனப் படரெழக் கண்டார்.

(இ - ள்.) அவ்வரிவையர், நெடிய களிற்றியானையின் மிசைத் தோன்றுமிவ்வுருவம், ஆண் பிறப்பினையுடையோர்க்கு மிகவும் துயரம் விளைக்கின்ற கொல்லி மலைமேற் பொருமையுடையதாய் விளங்கும் அக்கொல்லிப் பாவை போன்று, பெண் பிறப்பினர்க்கு நெடிய துயரத்தை விளைக்குமொரு பாவைதானோ என்று, ஐயுறுதற்குக் காரணமான பெருந்துயரம் தம் நெஞ்சத்தே தோன்றக் கண்டனர்.

(வி - ம்.) அணங்கு - துயரம். கொல்லிப்பாவை - தன்னை நோக்கிய ஆடவரை வருத்துமொரு கொல்லிமலை மிசையிருக்கும் பாவை. களிறு - மலைக்குவமை.

(234)

 மலர்ந்த பன்னிரு விழிகளும் வதனமும் வாயும்
 அலர்ந்த கைகளு முந்தியு மடியுங்கண் டமர்வார்
 பொலிந்த பங்கயக் காடுகண் டதனிடைப் புகவீழ்
 ஒலிந்த வோகையி னோதிமத் திரள்களே ளொத்தார்.

(இ - ள்.) எம்பெருமானுடைய மலர்ந்த பன்னிரண்டு திரு விழிகளும் திருமுக மண்டிலங்களும் திருவாய்களும் விரிந்த திருக் கைகளும் திருவுந்தியும் திருவடிகளுமாகிய இவ்வுறுப்புக்களைக் கண்டு பெரிதும் விழைவுறும் அவ்வரிவை மகளிர் ஓரிடத்தே பொலிவுற்ற தாமரை மலர்ச்