செறிவினைக் கண்டு அச் செறிவினூடே புகுதற்குப் பெரிதும் விரும்பத் தழைத்த மகிழ்ச்சியினையுடைய அன்னப்பறவையின் கூட்டத்தையே ஒத்தனர். (வி - ம்.) பெருமான் உறுப்புகள் தாமரைக் காட்டிற்குவமை வீழ் ஓகை ; ஒலிந்தவோகை எனத் தனித்தனி கூட்டுக. ஓதிமம் - அன்னம். (235) தெரிவை மகளிர் | மகர வாய்க்குழை நிலத்திடை மாறுபு நக்கத் | | தகர வார்குழல் பிறழமுன் றெரிவையர் தாழ்ந்தார் | | இகலும் வேள்கணை படமறிந் திறைஞ்சினா ரொத்தார் | | பகவ னாரருண் மழைக்குவீழ் பசுங்கொம்பு மானார். |
(இ - ள்.) மகரவாய் போன்ற உருவமைந்த தங்குழை நிலத்திலே பிறழ்ந்துபடும்படியும் மயிர்ச்சந்தனம் பூசிய நெடிய கூந்தல் பிறழா நிற்பவும் எம்பெருமான் திருமுன் வீழ்ந்து வணங்கிய தெரிவை மகளிர், மாறுபட்ட காமவேளின் கணைகள்படுதலானே வீழ்ந்து கிடப்போரை யொத்தனர். அன்றியும் இறைவனாருடைய திருவருளாகிய மழையை விரும்பித் தாழாநின்ற பசிய பூங்கொடிகளையும் ஒத்தனர். (வி - ம்.) மாறுபு - மாறி. தகரம் - மயிர்ச்சந்தனம். பகவன் - முருகன். (236) | தாழ்ந்த மங்கைய ருள்ளகம் விருப்பெனுஞ் சரங்கள் | | போழ்ந்து டற்றலி னெகிழுடை போற்றுவார் தாழ்ந்தாங் | | காழ்ந்த நெஞ்சமோ டிருந்தன ரறுமுகக் கடவுள் | | வீழ்ந்த தோடரி னலதெழா விரதங்கொண் டார்போல். |
(இ - ள்.) வணங்கிய அம்மகளிர் தமது நெஞ்சகத்தே விருப்பம் என்னும் கணைகள் பிளந்துவருத்துதலானே நெகிழாநின்ற தமது ஆடையினையும் பேணிக்கொள்ள மறந்து அவ்விடத்தே ஆறுமுகப்பெருமான் தாம் விரும்பிய திருத்தோளைத் தமக்குத் தந்தருளினல்லது எழாததொரு விரதங்கொண்டவர் போன்று இருப்பாராயினர். (வி - ம்.) ஆங்கு - அசைச் சொல்லுமாம். தோள்தருதல் - தழுவிக் கோடல். (237) | விண்ணிடந் துவன்றி நின்ற மெல்லியன் மாத ரெல்லாம் | | வண்ணமென் புருவ வார்வில் வளைத்துவேள் சரங்க | | ளென்னும் | | தண்ணகை முல்லைப் போதுந் தறுகண்மா நீலப் பூவும் | | அண்ணலங் கிலக்க மாக வெய்தன ரவச முற்றார். |
(இ - ள்.) இனி வானின்கண் நெருங்கிநின்ற மெல்லிய இயல்புடைய தேவமகளிரெல்லாம், எம்பெருமான்மிசை தமது அழகிய மெல்லிய புருவமாகிய வில்லை வளைத்துக் காமனுடைய கணைகள் என்று சொல்லப் |