பக்கம் எண் :

1358தணிகைப் புராணம்

(இ - ள்.) இளம்பிறையும் பாம்பும் சூடிய சடையையுடைய பேரருள் வள்ளலாகிய எந்தையாருடைய கழல் கட்டிய திருவடிகளை மறவாத அன்பு வழிபாட்டானே கள்ளமுடைய புலன்களை வென்ற சிறப்புடைய கண்ணுவ முனிவன் ஒருநாள் ஒளியுடைய வைகுந்தத்திற் சென்று புகுந்தான்.

(வி - ம்.) சடிலம் - சடை. வைகல் - நாள்.

(16)

 புள்ளே றுயர்த்த புயல்வண்ணன் றன்னோடு
 தள்ளாத வார்வத் துரையாடச் சார்குற்ற
 விள்ளாத சீர்த்தி விரதத் தவன்கோயில்
 உள்ளா லவனிருந்த வோங்கு சபையடுத்தான்.

(இ - ள்.) கருடக் கொடியுயர்த்திய முகில் வண்ணனாகிய அத்திரு மாலோடு ஒழியாத ஆர்வத்துடனே அளவளாவுதற்குச் சென்ற நீங்காத பெரும் புகழுடைய அக் கண்ணுவமுனிவன் வைகுந்தத்தே திருக் கோயிலின் அகத்தே அத்திருமால் வீற்றிருந்த உயரிய திருவோலக்கத்தை எய்தினன்.

(வி - ம்.) புள் - கருடன். சார்குற்ற - சார்ந்த.

(17)

வேறு

 ஓங்குதன் கூற்றான் முச்சக மளந்த
           வுபேந்திரன் முதலியோர் சூழப்
 பாங்குறு நளினப் பனிமலர்ப் பீடம்
           பாவையோ டிருந்தபொன் னுடையோன்
 ஆங்கெதி ரடுத்த முனிவனை நோக்கா
           னையென விருக்கைநின் றெழான்மற்
 றீங்கணை கென்ன மொழிகளும் பயிற்றா
           னிருக்கையு மளித்திடா திருந்தான்.

(இ - ள்.) அழகிய தாமரையாகிய குளிர்ந்த மலர்ப் பீடத்திலிருந்த திருமகளோடிருந்த பொன்னாடையணிந்த திருமால் உயர்ந்த தன்னுடைய ஒரு கூறாகி மூன்றுலகங்களையும் அளந்த உபேந்திரன் முதலிய தன் பரிவாரங்கள் புடைசூழ இருந்தவன், தன்னெதிரே வந்த முனிவனைக் கண்ணாலும் நோக்கிலன் ; விரைந்து இருக்கையினின்று மெழுந்திலன். ஈங்கே வருக! வருக! என்று வரவேற்பும் முகமனுமாகிய இன்சொலு மொழிந்திலன் அம்முனிவன் இருத்தற்கோர் இருக்கை தானுங் கொடுத்திலன்.

(வி - ம்.) பொன்னுடை - பொன்னாலியன்ற ஆடை. உபேந்திரன் - திருமாலின் ஒரு கூறானவன்.

(18)

 நன்றிவ னகந்தை யெனமுனி வெகுண்டு
           நசிக்குமித் திருக்கொடு தருக்கிப்