பக்கம் எண் :

விடையருள் படலம்1359

 பொன்றுநல் லறிவை மூகைபோன் றிருந்த
           புயல்வணா பொருகடற் கதித்த
 வென்றியங் கடுவை மிடற்றகத் தடக்கும்
           விகிர்தனார் வேடமெய்ப் படுத்த
 என்றனை யிகந்தாய் மூகைமைப் பிறவி
           யெண்ணில வுறுகெனச் சபித்தான்.

(இ - ள்.) அவன் நிலைகண்ட கண்ணுவமுனிவன் இவன் செருக்குச் சாலவும் பெரிதென்று சினந்து, அத்திருமாலை நோக்கி, "அழிதன் மாலைத்தாகிய இச்செல்வப் பேற்றானே செருக்குற்று நல்லறிவிழந் தோனே ! ஊமை போன்று வாய் வாளாவிருந்த முகில்வண்ணனே ! கேள் ! கரையினை மோதும் திருப்பாற்கடலிலே தோன்றிய வெற்றியுடைய நஞ்சினைத் தமது திருமிடற்றிலே வைத்தடக்கிய விகிர்தனாகிய சிவபெருமானுக்குரிய திருவேடத்தை உடம்பிலே கொண்டுள்ள என்னை மதித்திலை ! பேதாய் ! நீ எண்ணற்ற ஊமைப் பிறப்பினை அடைவாய் என்று சபித்தனன்.

(வி - ம்.) அகந்தை - செருக்கு. அறிவை - அறிவினையுடையை. மூகை - ஊமை. விகிர்தனார் - தமக்கெனச் செயல் செய்திலாதார்.          

(19)

 கானகத் துழலு மிருகமொத் திருந்த
           கமலநாண் மலரணைக் கிழத்தி
 தானுநெட் டிருங்கண் மான்வடி வனந்தஞ்
           சார்ந்திடப் படுகவென் றுறுத்தி
 ஊனமுற் றிரியத் தெள்ளிய வறிவி
           னுபேந்திரன் முதலியோர்ப் பாரா
 ஈனமுற் றடுக்கும் வேட்டுவப் பிறவி
           யெண்ணில வெடுமினென் றிறுத்தான்.

(இ - ள்.) மீண்டும் காட்டிற்றிரியாநின்ற விலங்குபோன்று இருந்த தாமரை நாண்மலர்க் கிழத்தியாகிய இத்திருமகள் தானும் எண்ணிறந்த நெடிய பெரிய கண்ணையுடைய மான்களாக பிறந்துழல்க என்று சாபமிட்டு, குற்றமுற்று அழிந்த தெள்ளிய அறிவினையுடைய உபேந்திரன் முதலியோரை நோக்கி, நீயிர் இழிதகைமை முழுதும் பொருந்திய வேட்டுவப் பிறவி எண்ணில எடுமின் என்று சபித்தனன்.

(வி - ம்.) மலரணைக்கிழத்தி - திருமகள். பாரா - பார்த்து.          

(20)

 ஒருவருஞ் சாப முறுத்திய முனிவ
           னொய்யெனப் பெயர்ந்துதன் னிருக்கை
 மருவினன் மாயன் முதலியோர் வெருவி
           மழைமிடற் றிறைவனை முறையான்