| மீனேறு சுனைப்பொதும்பர் மேற்பாடி வரைச்சாரல் | | தேனேறு துளவினான் சிவமுனியாய்த் தவமுழந்தான். |
(இ - ள்.) ஊன்மிக்க வேல்போன்ற கண்ணையுடையோய் ! இன்னுங் கேள் ! அம்முனியிட்ட வலியுடைய சாபம் பற்றியவுடனே, மணமிக்க மலர் பொதுளிய சோலை நறுமணங் கமழாநின்ற திருவல்லம் என்னும் திருப்பதியின் அண்மையிலே மீன்மிகுந்த சுனைகளையுடைய பொழிலையுடைய மேற்பாடி என்னும் மலைச்சாரலிலே தேன்மிக்க துளவ மாலையை யணிந்த திருமால் சிவமுனிவன் என்னுமொரு துறவோனாகித் தவம் புரிந்தனன். (வி - ம்.) வேற்கண்ணாயென்றது. பெருமான் தேவசேனையை விளித்தவாறு. வல்லம் - ஒரு சிவதலம். துளவினான் - திருமால். (23) | அவ்வரைசூழ் நெடுங்கானத் தடுக்கிதழ்ச்செம் மலர்வாழ்க்கைக் | | கொவ்வைநறுங் கனியிதழ்வாய்க் கோற்றொடிக்கைத் திருமாது | | முவ்வுலகு மதிசயிப்ப முழுக்கனக வொளிதுளும்ப | | நவ்வியுரு வெடுத்தன்னோ நவ்வியினத் தொடுமுழன்றாள். |
(இ - ள்.) அம்மலையைச் சூழ்ந்துள்ள நெடிய காட்டினூடே அடுக்கிய இதழையுடைய செந்தாமரை மலர்மேல் வாழ்கின்ற கொவ்வைக் கனிபோன்ற இதழமைந்த வாயையும் திரண்ட வளையலணிந்த கையையுமுடைய திருமகள் தானும் அந்தோ ! மூன்றுலகத்தோரும் வியக்கும்படி முற்றும் பொன்னொளி திகழவொரு மானுருவங் கொண்டு மான் கூட்டத்தோடு கூடித் திரிந்தனள். (வி - ம்.) கோல் - திரட்சி. கனகம் - பொன். நவ்வி - மான். அன்னோ - (முருகப்பெருமான்) இரக்கக் குறிப்பு. (24) | சுற்றமெலாஞ் சிலைவேடர் தொகையாக வெக்கலையும் | | கற்றுணர்ந்த வுபேந்திரனுங் கானவர்க்கோ ரிறைமகனாய்ப் | | பொற்றவளந் திகழ்குறிச்சிப் புளினரிறை பாலுதித்தான் | | மற்றவன்பல் கிளைதுவன்ற வரையரசு புரிகின்றான். |
(இ - ள்.) சுற்றத்தாரெல்லாம் வில்வேடர் கூட்டமாக எல்லாக் கலைகளையுங் கற்றுணர்ந்த உபேந்திரனும் வேடமன்னன் மகனாகிப் பொலிவுற்ற வளந் திகழாநின்ற குறிச்சியின்கண் ஒரு வேடர்க்கு அரசன் ஆனான். அவன் அச்சுற்றத்தார் சூழவிருந்து மலைநாட்டினை அரசு புரிகின்றவன். (வி - ம்.) கானவர் - குறிஞ்சிநில மாக்கள். இறைமகன் - அரசன். பொற்ற - பொலிவுற்ற. குறிஞ்சி - குறிஞ்சி நிலத்தூர். (25) | மைந்தர்பலர் தமையீன்று மகளின்றி வருந்தினான் | | முந்தையருந் தவப்பேற்றான் முனியெதிரப் பிணையடுப்ப |
|