பக்கம் எண் :

விடையருள் படலம்1363

 ஆனந்தந் தலைசிறப்ப வளவளா வியபின்றைக்
 கானந்து மலர்க்கூந்தற் கானவர்தங் குலமாது
 தேனந்து மலர்க்கடப்பந் தெரியலான் கழல்வணங்கி
 வானந்து மித்தணிகை வரைவாய்மை யருளென்றாள்.

(இ - ள்.) இவ்வாறு இருவரும் மகிழ்ச்சி பெருக அளவளாவிய பின்னர், மணம்வளரும் மலரணிந்த கூந்தலையுடைய குறமகளார், தேன் மிக்க கடப்பமலர் மாலையணிந்த பெருமான் திருவடிகளை வணங்கிப் பெருமானே ! துறக்கத்தை ஒத்த இந்தத் திருத்தணிகை மலையினது மாண்பினை திருவாய் மலர்ந்தருள்க என்று வேண்டினர்.

(வி - ம்.) ஆனந்தம் - இன்பம். கான் - மணம் - காடுமாம். நந்துதல் - மிகுதல். வானந்து - என்புழி, நந்து : உவமவுருபு. வாய்மை - மாண்பின்
மேனின்றது.

(29)

வேறு

 வாடிய தேவர்கள் வன்சிறை
 சாடிய வேற்படைச் சண்முகன்
 ஓடரி மாமழை யுண்கணாய்
 பாடுதுங் கேளெனப் பன்னுவான்.

(இ - ள்.) அசுரர்களாற்றுன்பமடைந்து மெலிந்த அமரர்களுடைய வலிய சிறையை வீடுசெய்த வேற்படையினையுடைய ஆறுமுகப் பெருமான் அங்ஙனம் வினவிய வள்ளியை நோக்கிச் செவ்வரியோடிய கரிய குளிர்ந்த மையுண்ட கண்ணையுடையோய் இம்மலைமாண்பினைக் கூறுவேம் கேட்பாயாக என்று
கூறத்தொடங்கினன்.

(வி - ம்.) மா - கரிய. மழையுண்கண் : உவமத்தொகை. பாடுதும் - கூறுவேம்.

(30)

 வளமலி காஞ்சிதன் வைப்பிடை
 அளவலி னிந்தவ டுக்கலை
 நளிவள மாநக ரேழுளும்
 ஒளியொடு சீர்த்துயர் வுற்றதே.

(இ - ள்.) இந்தத் திருத்தணிகைமலை வளமிக்க காஞ்சிநகரத் தெல்லையுள் இருத்தலான் தலைமைத் தன்மையுடைய அக்காஞ்சி முத்தி நகர் ஏழனுள்ளும் புகழோடு சிறந்துயர்ந்ததாயிற்று.

(வி - ம்.) காஞ்சி தன் வைப்பிடை இந்த அடுக்கல் அளவலின் ஐநகர் ஏழுளும் காஞ்சி உயர்வுற்றது என்க. ஐ - தலைமைத் தன்மை

(31)

 விலங்கலுள் வெள்ளி விலங்கல்பாப்
 பலங்கலி னார்க்குரித் தாங்கெமக்
 கிலங்குப லோங்கலு ளிவ்வரை
 பொலங்கொடி யார்வம் புணர்ப்பதே.