(இ - ள்.) என்று இவை முதலாகவுள்ள சிறப்பெல்லாம் நன்றாக உணர்த்தியருளாநின்ற முருகப்பெருமான் திருமுன் செறிந்த மலருடைய கூந்தலையுடைய வள்ளிநாயகியார் நம்பியினுடைய குறையாத பேரருளைப் பெற்றேமென்று அன்பாலே வணங்கி மகிழ்ந்தனர். (வி - ம்.) நம்பி - முருகன். மொய்பூங்குழல் - வள்ளி. (43) | படைவேல் வலம்பற் றுகும ரேசன் | | விடைமே வரவீ சியது சொற்றாம் | | நடைமே தகுநா ரதன டுத்துத் | | தொடையான் விடைசூழ்ந் தமைகி ளப்பாம். |
(இ - ள்.) வேற்படையினை வலத்திருக் கையின்கண் பற்றியருளிய குமரப் பெருமான் தேவியர் இருவர் வினவிற்கும் விடை விரும்புதல் வரக் கூறியதை இதுகாறும் கூறினோம். இனி ஒழுக்க மேன்மையாற் றகுதியுடைய நாரதமுனிவன் வினவாலே விடைபெற்றமை கூறுதும் கேண்மின். (வி - ம்.) சொற்றாம் - சொன்னோம். நடை - ஒழுக்கம். தொடை - வினா. கிளப்பாம் - கூறுவாம். (44) விடையருள் படலம் முற்றிற்று. |