நாரதன் அருள்பெறு படலம் | போர வாய்ப்புர ளுஞ்சின வேற்கணார் | | வார மாய்மறு கும்மயர் மாக்கடல் | | தீர வான்கரை சேர்க்கும் புணையரோ | | நார தீச்சுர னாண்மலர்ப் பாதமே. |
(இ - ள்.) நாரத முனிவனாலே நிறுவி வழிபடப்பட்ட பரமசிவனுடைய புதிய தாமரை மலர்போன்ற திருவடி, போர்த்தொழிலை விரும்பிப் பிறழாநின்ற சினமுடைய வேல்போலுங் கண்ணையுடைய மகளிர்சார்பிற் சென்று துன்புறாநிற்றற்குக் காரணமான மயக்கமாகிய பெரிய கடல் கழியா நிற்பச் சிறந்த முத்தியாகிய கரையிலே உயிர்களைச் செலுத்துந் தெப்பமாம். (வி - ம்.) பாதம் கடல்தீரக் கரைசேர்க்கும் புணையாம் என்க. (1) வேறு | மண்றல்கம ழுங்குவளை மென்மலர்வி ரிந்தசுனை | | மல்குகயி லைக்க ணொருநாள் | | கொன்றைபுனை செஞ்சடில மன்றியபெ ரும்புனல் | | குறுந்துளியெ னக்க துவுற | | வென்றருளு மங்கணன ணங்கொடும டங்கலணை | | மீமிசையி ருப்ப வெவரும் | | துன்றினர்ந ரம்புளர ருந்தவனு மங்கணெதிர் | | துன்றுபுப ணிந்து தொழுதான். |
(இ - ள்.) நறுமணங் கமழாநின்ற செங்கழு நீரினது மெல்லிய மலர்கள் மலர்ந்துள்ள சுனைகண் மிகுந்த கயிலை மலையின்கண் ஒருநாள் கொன்றை மலர் அணிந்த செவ்விய சடையின்கண் மோதிய பெரிய கங்கை நீர் நுண்ணிய துளிபோலப் பொருந்த அதன் செருக்கையடக்கி வென்றருளிய அழகிய கண்ணையுடைய பரமசிவன் உமையன்னையாரோடு அரியணைமிசை வீற்றிருந் தருளாநிற்கத் தேவர் முதலிய யாவரும் வந்து குழுமினர். அப்பொழுது யாழ் வருடு மியல்புடைய நாரத முனிவனும் சிவபெருமான் திருமுன்னணுகி வணங்கினன். (வி - ம்.) சடிலம் - சடை. அன்றிய - பகைத்த. அங்கணன் - சிவபெருமான். மடங்கலணை - அரியணை. துன்றுபு - அணுகி. (2) | வாரியும்வ டித்துநனி யுந்தியுமு றழ்ந்துமணி | | யாழினிசை பாடி முனிவன் | | ஓருமருள் பெற்றவணொ ழிந்துபெயர் கின்றவ | | னுளத்திடை யயிர்த்தஃ துதான் |
|