பக்கம் எண் :

நாரதன் அருள்பெறு படலம்1369

 தீரவொரு தாதைபயில் வானுலக மண்மியெதிர்
           சென்றடிவ ணங்கி யிறைவ
 வாரமொடி யான்வினவ நீயருள நின்றதொரு
           வாய்மையிது வென்று மொழிவான்.

(இ - ள்.) நரம்பினைச் சுட்டுவிரலானே வாரியும் சுட்டுவிரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பினை அகமும் புறமும் ஆராய்ந்தும், அவற்றைப் பெரிதும் தெரித்தும், அவற்றை ஒன்றிடையிட்டும் இரண்டிடை யிட்டும் ஆராய்ந்தும் இன்னோரன்ன எண்வகை இசைக் கரணங்களானும் அழகிய யாழினைப் பண்ணுறுத்திச் செவியானோர்ந்து இறைவன் புகழை இசைப் பாட்டாகப் பாடி எம்பெருமானுடைய திருவருள் பெற்று அவ்விடத்தினின்றுஞ் செல்லா நின்ற அந்நாரத முனிவன் தன் நெஞ்சத்தின்கண் ஓர் ஐயங்கொண்டு அந்த ஐயந் தீர்தற் பொருட்டுத் தன் தாதையாகிய பிரமதேவன் வாழ்கின்ற பிரமலோகத்தை அடைந்து தாதைமுன் சென்று வணங்கி எந்தாய் ! அன்புடனே அடியேன் நின்பாற் கேட்கவேண்டுவதும் நீ விடைதருதற்குரியது மாகிய ஒரு வாய்மையுளது என்று அதனைக் கூறுவானாயினன்.

(வி - ம்.) வார்தல் முதலியன - இசைக்கரணங்கள். முனிவன் - நாரதன். அயிர்த்தஃது : ஆய்தம் செய்யுள் விகாரம். வாரம் - அன்பு.

(3)

 இலிற்றுமழை மும்மதவெ றுழ்க்களிறு வெம்பரி
           யெழிற்சிவிகை தேர்முத லொரீஇப்
 பிலிற்றுமது நுண்டுகண றுங்கடிய கொன்றைபிறை
           வேணிமுடி வைத்த பெருமான்
 வெளிற்றுவிடை யூர்திகொள லென்னைவிரை யார்பொருள்கள்
           வேண்டியவி ருப்ப வணியா
 தொளிற்றுருவ நீறணித லென்னெனவிவ் வாறுபல
           வுங்கடவி னான்க டவலும்.

(இ - ள்.) எந்தையே ! மூன்று மதங்களையும் மழைபோன்று பொழியாநின்ற வலிய களிறும், விரும்பத்தகுந்த குதிரையும், அழகிய சிவிகையும், தேருமாகிய சிறந்த ஊர்திகளை விரும்பாமல், துளிக்கின்ற தேனையும் நுண்ணிய மகரந்தத்தையும் நறிய மணத்தையுமுடைய கொன்றை மாலையினையும் பிறையினையும் தனது சடை முடியிலே வைத்தருளிய வெள்ளைக் காளையூர்தியை விரும்பி மேற்கோடற்குக் காரணம் யாது ? மணம்பொருந்திய பொருள்கள் வேண்டுமளவின பற்பலவிருப்ப அவற்றை அணியாமல் விளங்காநின்ற தன் திருமேனியில் வெண்ணீறு அணிதற்குக் காரணம் யாது ? என்று இவ்வாறு பல வினாக்களை வினவினன். அங்ஙனம் வினவியபொழுது,

(வி - ம்.) இலிற்றும் - பொழியும். பிலிற்றும் என்பதுமது. வெளிற்றுவிடை - வெள்ளைக் காளை. விரை - மணம்.

(4)