பக்கம் எண் :

1372தணிகைப் புராணம்

(வி - ம்.) விதும்புற - நடுங்க. அதுக்கி - குட்டி. காதுதல் - கூறுபடுத்துதல். இரசதம் - வெள்ளி. கழன்று - நீங்கி. உறீஇ - உற்று. ஆதி - சிவபெருமான், சுருதி ஆதிமொழி - பிரணவம்.

(8)

 ஆருயிர ளிக்கும்வர மெய்தமல யத்தணிமை
           யின்கணவிர் மூன்று சிகரத்
 தேருமொரு வெற்படியி ருந்துதவ மாற்றியிறை
           யோனடிப ணிந்து பரவ
 வாரணிச டைப்பரம னேவலின டுத்தருளி
           லிங்கம்வழி பட்ட ணவியான்
 சாரரிய மாதவமு ழப்பவுல காக்குமரு
           டந்தவரை யந்த வரைகாண்.

(இ - ள்.) நாரதனே இன்னும் கேள், யான் உயிர்களைப் படைத்தளிக்கும் வரம் பெறற் பொருட்டுப் பொதிய மலையின் அண்மையில் விளங்குகின்ற மூன்று சிகரத்தோடு எழுச்சியுடைத்தாகியதொரு மலையினடியிலே இருந்து தவம் புரிந்து சிவபெருமான் திருவடிகளை வணங்கி வழிபடாநிற்ப நீண்ட அழகிய சடையினையுடைய அவ்விறைவன் என்முன் எழுந்தருளி ஏவுதலினாலே யான் ஆங்கு அருட்குறி நிறுத்தி அவ்விறைவனை வழிபாடு செய்து பின்னர்ச் சென்று எய்தற்கரிய பெரிய தவத்தைச் செய்துழி உலகத்தைப் படைக்கும் ஆற்றலை எனக்கு முருகப்பெருமான் வழங்கியது அத் திருத்தணிகை மலையிலேதான். இதனையும் அறிவாயாக.

(வி - ம்.) மலயம் - பொதியில். ஏரும் ஒரு வெற்பென்புழி - ஏர்உம் எனக் கண்ணழித்து உம் இசைநிறையென்க. ஏர் - எழுச்சி. அழகுமாம். இறையோன் - சிவன். அணவி - அணுகி.

(9)

 இலைப்புரைகி ளைத்துநெடு மாலுமறி யாதவிறை
           யோனருளி னால ணவியெக்
 கலைப்பொலிவு முற்றுமரு ணந்திதவ மாற்றவெதிர்
           காமர்மயி லூர்தி வெளிநின்
 றலைப்புனலி னுந்தியைய ழைத்ததின ழுத்தியருண்
           ஞானமும ளித்தி ரவியிற்
 றலைப்படுமொ ளிக்கணென வின்பநிறை விற்புணர்வு
           தந்தவரை யந்த வரைகாண்.

(இ - ள்.) திருமாலும் மிகத் தேடிக் காண்கிலாத சிவபெருமான் ஏவுதலினாலே எல்லாக் கலைகளின் அழகும் முற்றிய அருளையுடைய நந்திதேவன் அணுகித் தவம்புரியா நிற்ப, அவன் முன்பு அழகிய மயிலூர்தி யாகிய முருகப்பெருமான் வெளிப்பட்டு நின்று அலையுடைய அறிவு நீர்ப்பேரியாற்றை வரவழைத்து அந்நந்திதேவனை அவ்வியாற்றின்கண்