பக்கம் எண் :

விடையருள் படலம்1373

முழுகச்செய்து திருவருண்ஞானமும் வழங்கி, அவன் ஞாயிற்று மண்டிலத்தொடு பொருந்திய ஒளியுடைய கண்போன்று இன்ப நிறைவிலே புணர்ந்து மகிழும்படி அருள் புரிந்த மலை, அத் திருத்தணிகை மலையே காண்.

(வி - ம்.) "இலைப்புரை கிளைத்தல்" ஒரு பழமொழி. தேடுதல் என்னும் கருத்துடையது. "ஈட்டமும் வேறுமாகியிலைப்புரை கிளைத் திட்டேமே" எனவருஞ் சிந்தாமணியுங் காண்க. (1741) உந்தி - யாறு.

(10)

 கும்பமுனி யண்மிநனி யார்த்துநட மிட்டவருள்
           கூர்பரன டிக்க ணறுநீர்
 வம்பலர்சொ ரிந்தயல்வ ராகபுரம் வைகியொளி
           வாய்ந்தசிவ லிங்க மிருவி
 நம்புசிக ரத்திடையி வர்ந்துதவ மாற்றநவை
           தீர்தமிழ்வி ரிக்கு முதன்மை
 பம்புசிவ ஞானமொடு பன்னிருகை யாரியன்
           பணித்தவரை யந்த வரைகாண்.

(இ - ள்.) மேலும் கும்ப முனிவன் அணுகிப் பெரிதும் ஆரவாரித்துக் கூத்தாடிய அருண்மிக்க சிவபெருமானுடைய திருவடிக்கண் நறிய நீரும் புதிய மலருஞ் சொரிந்து அயலிலுள்ள வராகபுரத்திலே தங்கி ஆண்டு ஒளி பொருந்திய இறைவனருட்குறி நிறுத்திப்பெருமையுடைய சிகரத்திலேறி ஆண்டிருந்து தவம்புரியா நிற்புழி, ஆசானாய்ப் பன்னிரு கைப் பரமன் அவன் முன்னெழுந்தருளிக் குற்றமற்ற செந்தமிழ் மொழிக்கு இலக்கணம் விரிக்கின்ற தலைமைத் தன்மையையும் பெருகிய சிவஞானத்தையும் அவ்வகத்திய முனிவனுக்கு வழங்கியருளிய மலை அத்திருத்தணிகை மலையே காண்.

(வி - ம்.) கும்பமுனி - அகத்திய முனிவன். நடமிட்டபரன் - அருள்கூர்பரன் எனத் தனித்தனி யியைக்க. கும்பமுனி அண்மிச் சொரிந்து வைகி இருவி, இவர்ந்து ஆற்ற ஆரியன் பணித்தவரை அவ்வரை என்க. ஆரியன் - ஆசான்.

(11)

 இந்திரனு யிர்த்தமக னோடமரர் தங்களை
           யிருஞ்சிறைப டுத்த வவுணர்
 வெந்திறனெ டும்படைய னைத்தையு முடித்துவிறல்
           வாகைமுடி சூடி யவுணர்
 முந்துகவர் மாயன்முத லோர்திருவெ னைத்தையு
           முகந்துகொடு போந்தி ருவுபு
 பிந்தணவி யாங்கடவ மாற்றியிறை நல்கவவை
           பெற்றவரை யந்த வரைகாண்.