பக்கம் எண் :

1376தணிகைப் புராணம்

 மட்டும துக்கமழ் கொன்றைம லைத்தழ லாடிய வெம்பெருமான்
 உட்டிக ழுங்கருணைக்கடல் பொங்கவு வந்தெதிர் தோற்றினனால்.

(இ - ள்.) செவ்விய சடைகட்டியுள்ள நாரத முனிவன் ஒரு திங்கள் பட்டினியாகவிருந்து யாண்டும் நிறைந்த சிவபெருமான் வழிபாட்டிலே அன்போடு கழித்த வளவிலே தேனும் மகரந்தமும் கமழா நின்ற கொன்றைமலர்மாலை சூடி மழுவெடுத்தாடிய சிவபெருமான் தன்னுட்டிகழா நின்ற அருளாகிய கடல் பொங்குதலானே மகிழ்ந்து அந்நாரத முனிவன் முன்பு வெளிப்பட்டுத் தோன்றாநின்றான்.

(வி - ம்.) பராபரன் - சிவபெருமான். மட்டு - தேன். மது - மகரந்தம்.

(17)

 கண்டும கிழ்ந்துவ ணங்கிநி மிர்ந்துக ரஞ்சிரம் வைத்தெனையாள்
 அண்டப ராபர வென்பர வங்கள தட்குல நீறணியாக்
 கொண்டவ வெள்விடை யூர்குழ காவொளிர் கொக்கிற கீரமதித்
 துண்டமு டிச்செரு குந்தலை வாசர ணென்றுது தித்தனனே.

(இ - ள்.) எம்பெருமான் எழுந்தருளியதனைக் கண்ட முனிவன் மகிழ்ந்து திருவடியிலே வீழ்ந்து வணங்கி எழுந்து கைகளைக் கூப்பித் தலைமேலேற்றி நின்று, என்னையாளுடைய தேவனே ! மேலான இறைவனே ! என்பும் பாம்புகளும் தோல் வகைகளும் வெண்ணீறுமாகிய இவற்றை அணிகலன்களாக மேற்கொண்டவனே ! வெள்ளை எருதேறும் குழகனே ! விளங்காநின்ற கொக்கிறகினையும் குளிர்ந்த பிறைத் திங்களையும் முடியிலே செருகியுள்ள முதல்வனே வணக்கம் என்று வாழ்த்தினன்.

(வி - ம்.) அதள் - தோல். மதித்துண்டம் - பிறை.

(18)

 புகழ்ந்தவ னிற்பவு ளத்தினி னைந்தபு ணர்ப்பறி யும்பெருமான்
 நெகிழ்ந்தவு ளத்தவ நின்குறை வல்லைநி ரப்பும ழற்சுடர்வேல்
 திகழ்ந்தக ரத்தவ னென்றரு ளிச்சிவ லிங்கம றைந்தனனவ்
 வுகந்தவ ருட்குறி நாரத லிங்கமெ னப்பெய ருற்றதரோ.

(இ - ள்.) நாரத முனிவன் இவ்வாறு இறைவனை வாழ்த்தி நிற்புழி உயிர்கள் தம் நெஞ்சத்தே நினைந்த கருத்தினை யுணருமியல்புடைய சிவபெருமான், அன்பாலே நெகிழ்த்த நெஞ்சமுடைய நாரதனே சினமுடைய ஒளிவேல் விளங்காநின்ற கையையுடைய முருகன் நின் மனக் குறையை விரைந்து நிரப்பா நிற்பன் காண் என்று திருவாய் மலர்ந்தருளிச் சிவலிங்கத் திருவுருவின்கண் மறைந்தருளினன். நாரதனால் நிறுவி விரும்பப்பட்ட அச்சிவலிங்கம் நாரதலிங்கமென்று பெயர் பெறுவதாயிற்று.

(வி - ம்.) புணர்ப்பு - எண்ணம். உளத்தவ : விளி. வல்லை - விரைவில். அருட்குறி - சிவலிங்கம்.

(19)

 அத்தகு நாரத லிங்கம்வ ணங்குநர் வாழ்த்துந ரார்வமெலாம்
 மெத்திய செல்வர்க ளாய்வினை முற்றும்வி ளித்துயர் வீடுறுவார்