| | பாம்பணர்ந்தன்ன பைங்கோட்டுப் பன்மணிமா டகத்தள்ளற் | | | றூம்புறைஞெண் டின்கணன்ன துரப்பமையா ணித்திவவின் | | | ஓம்பியபச் சையினல்யா ழொண்கையிடத் துத்தழுவித் | | | தேம்பயிறந் திரிதொட்டுத் தேக்கினன்பண் ணாரமிழ்தம். |
(இ - ள்.) பாம்பு தலையெடுத் துயர்ந்தாற் போன்று பசிய கோட்டினையும், பலவாகிய மணிகளிழைத்த மாடகத்தையும் சேற்று வளையிலுறைகின்ற நண்டினது கண்ணை ஒத்த முடுக்குதலமைந்த ஆணியை உடைய வார்க்கட்டினையும் பாதுகாக்கப்பட்ட பச்சையினையும் உடைய இலக்கணத்தால் நல்ல யாழினை ஒள்ளிய கையிற்றழுவி இனிமைமிக்க நரம்பினை வருடிப் பண்ணாகிய செவிநுகர் அமிழ்தத்தைப் பெருக்கினன். (வி - ம்.) கோடு, மாடகம், ஆணி, திவவு, பச்சை, தந்திரி என்பன யாழுறுப்புகள். (23) | | மிதுனம்பயில் கின்னரங்கண் மெய்சோர்ந்தவனி யின்வீழக் | | | கதுமெனவற் றன்மரங்கள் காமருமென் றளிரீன | | | முதுவரைநெக் குண்ணெகிழ முன்னின்றுபா டியபின்றைச் | | | செதுமறுமா முனிகோயிற் றிருமாளிகை வலஞ்செய்தான். |
(இ - ள்.) பொல்லாமை அற்ற சிறந்த நாரத முனிவன், ஆணும் பெண்ணுமாகக் கூடிவாழு மியல்புடைய கின்னரங்கள் இன்பத்தாலே மெய்மறந்து நிலத்திலே வீழவும், வற்றன் மரங்கள் விரைந்து அழகிய மெல்லிய தளிரை ஈனாநிற்பவும், பழைதாகிய அத்திருத்தணிகைமலை நெகிழ்ந்துள்ளுள்ளே உருகவும், எம்பிரான் முன்னின்று பாடிய பின்னர்த் திருக்கோயிற் றிருமாளிகையை வலஞ்செய்தனன். (வி - ம்.) மிதுனம் பயிலல் - ஆணும் பெண்ணுமாய்ச் சேர்தல். கின்னரம் - இசைக்குருகும் ஒருவகைப் பறவை. கதுமென - விரைய. செது - பொல்லாமை ; குற்றம். (24) | | வலம்புரிகா லைநிருதி மாதிரத்தண் மையிற்றோன்றும் | | | அலம்புபுனற் சுனைநோக்கி யார்வமொடங் கணடைந்து | | | சிலம்பரசன் முருகேசன் சேவடிசிந் தையிருத்தி | | | நலம்புரியோ கினிருந்தா னாளுமந்நீர்ச் சுனைதோய்ந்து. |
(இ - ள்.) இங்ஙனம் வலம் வரும்பொழுது தென்மேற்றிசையின் கண் அண்மையில் தோன்றாநின்ற ஒலிக்கின்ற நீரையுடைய சுனையினைக் கண்டு ஆர்வத்தோ டதனை எய்தி மலைக் கடவுளாகிய முருகக் கடவுள் சிவந்த திருவடிகளைத் தன் நெஞ்சத் தாமரையிலே இருத்தி நாடோறும் அச்சுனையிலாடி நன்மையைத் தருகின்ற யோக மியற்றினன். (வி - ம்.) நிருதிமாதிரம் - தென்மேற்றிசை. சிலம்பு - மலை. (25) | | பன்னெடுநாள் கழிவெய்தப் பாரிடம்விண் ணவர்சூழப் | | | பின்னர்நெடு குங்கலாவப் பிணிமுகமூர்ந் தெனையாளும் |
|