| (வி - ம்.) கடுத்த - பலவறிசொல். ஐயுறப்பட்டவை. இறையாகிய நீ காட்சி கொடுத்த என்க. விழைந்த - விழையப்பட்டவை. (31) | | தந்த னம்வரமெ னத்தவனு டங்கு படரக் | | | கொந்தொ ளிக்கதிர்செய் கோயிலினு ழைந்த ணையிருந் | | | தந்த ணாவுளம யிர்த்ததெவ னோது தியென | | | எந்தை யுய்ந்தன னெனத்தொழு திறைஞ்சி மொழிவான். |
(இ - ள்.) எம்பெருமான் அவ்வரங்களை வழங்கினேம் என்றருளிச் செய்து அம் முனிவனும் தன்னோடு வாரா நிற்பப் பேரொளிக்கதிர் பொழியா நின்ற தனது திருக்கோயிலின்கட் சென்று அணைமிசை வீற்றிருந்த பின் நாரதனை நோக்கி அந்தணனே ! நீ நின்னெஞ்சத்தே ஐயுற்ற பொருள்கள் யாவை ? அவற்றைக் கூறுக என்று பணிப்ப, அம் முனிவன் எம்பெருமானே ! உய்ந்தேன் உய்ந்தேன் ! என்று மகிழ்ந்து தொழுது வணங்கிக் கூறுபவன் ; (வி - ம்.) தவன் - முனிவன். உடங்கு - கூட. அயிர்த்தது - ஐயுற்றது. (32) | | கேழி லாதகிளர் பேரொளிய னாதி யிறைவன் | | | பாழி மாலிருள்ப டுப்பவுறு தூய வுருவன் | | | ஊழி னால்வறுமை யுற்றுமதி கெட்ட வர்கள்போல் | | | வேழ மாதிகள்வி டுத்துவிடை யூர்ந்த தெவனே. |
(இ - ள்.) ஒப்பில்லாத கிளர்ச்சியையுடைய பேரொளிப்பிழம் பாகியவனும் அனாதியே இறைமைத் தன்மையுடையவனும் வலிய பெரிய ஆணவமலமாகிய இருளை அழித்தற் பொருட்டுத் தூயதான அருட்டிரு மேனிகொள்பவனுமாகிய சிவபெருமான், யானை முதலிய சிறந்த ஊர்திகளையெல்லாம் விடுத்து, போகூழாலே வறுமையெய்தி அறிவுமற்றவர்கள் போன்று காளையை ஊர்தற்குக் காரணம் யாது ? (வி - ம்.) கேழ் - உவமை, பாழி - வலிமை. இருள் - ஆணவமலம். ஊழ் - போகூழ். (33) | | நாறு சாந்தநறு நீர்புழுகு நல்ல வொருவி | | | நீறு நாளுநிமிர் மேனிதிமிர் கின்ற தெவனே | | | ஏறு மாமணியி ருப்பவிழி வென்பு தலைநஞ் | | | சூறு பாம்பிறகெள் ளோடுலவை கொண்ட தெவனே. |
(இ - ள்.) நறுமணங்கமழும் சந்தனமும் நறிய பனி நீரும் புழுகும் ஆகிய இன்னோரன்ன நல்லனவாகிய நறுமணப் பொருள்களை விடுத்து ; நாடொறும் இறைவன்தனது உயரிய திருமேனியின்கண் சுடலைப் பொடி பூசுவ தெற்றிற்கு ? இனி விலைமிகுஞ்சிறந்த மணி முதலியன விருப்ப அவற்றை விடுத்து உருத்திராக்க மணியையும் என்பையும் தலைமாலை யினையும் நஞ்சு ஊறாநின்ற பாம்பினையும், கொக்கிறகினையும், இகழ்தற் |