| குரிய யாமை யோட்டினையும், பன்றிமருப்பினையும் அணிந்து கொண்ட தேன் ? (வி - ம்.) நாறுசாந்தம் - வினைத்தொகை. நறிய நீர்மையுடைய புழுகுமாம். விழி - கண்மணி ; உருத்திராக்கமணி, இறகு - கொக்கிறகு. எள்ளோடு - வினைத்தொகை. உலவை - கொம்பு. (34) | | ஆடை தீரவதள் கொண்டதெவ னங்கி மழுமா | | | னோடு நீர்மதிசு மந்ததெவ னூறு சுவையின் | | | நீடு வானமிழ்த நீக்கிவிட முண்ட தெவன்மெய் | | | வேடம் வேறுறவெவ் வேறுருவெ டுத்த தெவனே. |
(இ - ள்.) பொன்னாடை முதலியவற்றை அணியாமல் விடுத்துத் தோலாடை சுற்றிய தெற்றிற்கு ? தீயும் மழுவும் மானுமென்னுமிவற்றோடு கங்கையையும் பிறையையும் சுமந்ததென்னை ? நாவூறுதற்குக் காரணமான சுவையினையுடைய நெடிய வானவர்தம் அமிழ்தத்தை உண்ணுதல் விடுத்து நஞ்சுண்டதெற்றிற்கு ? தனக்கியல்பான உருவம் வேறுளதாக வெவ்வேறு வகை உருவங் கோடல் எற்றிற்கு ? (வி - ம்.) அதள் - தோல். மெய்வேடம் - உண்மையுருவம். (35) | | திருத்த குங்கடவு ளார்திரளி ருப்ப வகடு | | | பெருத்த பாரிடர்ம ருங்கமைவு பெற்ற தெவனே | | | வருத்த முற்றுகலுழ் தற்பொருள்வ ழங்கி வருமவ் | | | வுருத்தி ரப்பெயரு கப்பொடுத ரித்த தெவனே. |
(இ - ள்.) அழகுத் தகுதியுடைய அமரர் கூட்டத்தைவிட்டுவயிறு பருத்த பூதக் கூட்டத்திடையே இருக்கை பெற்றதென்னை ? துன்பமுதிர்கின்ற அழுதல் என்னும் பொருள் வழங்கி வருகின்ற அந்த வுருத்திரம் என்னும் பெயரினை உவகையோடு தாங்கியிருத்தற்குக் காரணம் யாது ? (வி - ம்.) கடவுளர் - அமரர். அகடு - வயிறு. துன்பமுதிரும் கலுழ்தல் என்னும் பொருள் என்க. (36) | | கடிஞை கொண்டுபயிக் கம்புகுவ தென்னை கனல்சேர் | | | சுடலை யாடுதொழி லென்னையுறு தூர்த்தர் விழைய | | | இடைவி டாதுவரை மாதொடுமி ருப்ப தெவனே | | | உடனி ருந்தவுமை காணநட மாட லெவனே. |
(இ - ள்.) கையில் ஓடேந்திப் பிச்சைபுக்கது எற்றிற்கு ? நெருப்பிருந்த நன்காட்டிற் கூத்தாடுதல் எற்றிற்கு ? மிக்க கயமையுடையோர் போன்று இடையறாமல் மலைமகளோடு கூடியிருத்தல் எற்றிற்கு ? மேலும் தன்னோடிருந்த அவ்வுமையம்மையார் காணும்படி கூத்தாடுதல் எற்றிற்கு ? (வி - ம்.) கடிஞை - இரப்புக்கலம். பயிக்கம் - பிச்சை. தூர்த்தர் -கயவர். விழைய - உவமவுருபு. (37) |