பக்கம் எண் :

விடையருள் படலம்1383

 வீணை மாமுனிவ னின்னணம்வி னாவ மகிழாக்
 கோணை வேல்வயவன் கும்பமுனி வன்ப ணியமுன்
 ஓண னார்க்கரிய வுத்தமனு ரைத்த னனிவை
 மாண மற்றினிவ குப்பலென வாய்ம லருமால்.

(இ - ள்.) நாரத முனிவன் இவ்வாறு வினவியபொழுது எம்பெருமான் மகிழ்ந்து முனிவனே ! பண்டொரு காலத்தே இவ் வினாக்களை அகத்திய முனிவன் திருமாலுந் தேடிக்காண்டற்கியலாத சிறப்பினை யுடைய சிவபெருமானை வணங்கிக் கேட்ப அப்பெருமான் அம் முனிவனுக்குணர்த்தி யருளினன். அவற்றை மாண்புற நினக்குக் கூறுவேம் ; கேட்டுணர்க என்று திருவாய் மலர்ந்தருளாநின்றனன்.

(வி - ம்.) வீணை முனிவன் - நாரதன். கோணை - அழிவில்லாத ; கொடிய எனினுமாம். வேல்வயவன் - முருகன். ஓணனார் - திருமால். மாண மாணவனே ! எனினுமாம்.

(38)

வேறு

 ஆயிரத் திரட்டிச் சதுருக மொருநா
           ளயற்கது முப்பது திங்கள்
 ஆயவத் திங்கள் பன்னிரண் டாண்டவ்
           வாண்டுநூ றாயுளவ் வாண்டு
 மாயவற் கொருநா ளம்முறை நூறு
           வருடமு மரீஇப்பெயர் காலை
 மாயவன் முதலா முலகெலாம் பரந்து
           வயங்குசெந் தீக்கரந் துணுமால்.

(இ - ள்.) பிரமதேவனுக்கு இரண்டாயிரஞ் சதுர்யுகங்கள் ஒரு நாளாகும் ; அத்தகைய நாள் முப்பது ஒரு திங்களாகும். அத்தகைய திங்கள் பன்னிரண்டு அவனுக்கோரியாண்டாகும். அத்தகைய ஆண்டு நூறு அப்பிரமதேவன் ஆயுள் ஆகும். பிரமதேவன் ஆயுட்காலமாகிய அந்நூறாண்டுகள் திருமாலுக்கு ஒரு நாளாகும். இம்முறையே யுற்ற நாள்களாலியன்ற நூறியாண்டுகள் நிகழ்ந்து கழியா நின்ற ஒரு திருமாலூழியின் முடிவின்கண் அத்திருமால் வாழும் உலக முதலிய எல்லா வுலகங்களையும் பரவி விளங்கும் ஊழித்தீ தன்னுளடக்கிக் கொண்டு உண்ணா நிற்கும்.

(வி - ம்.) சதுருகம் - கிருதயுகமுதலிய நான்குகங்கள்.

(39)

 அத்தகு முடிவொன் றெய்தலு முலக
           மழிவுநோக் கியவறக் கடவுள்
 இத்தகு முடிவிங் கெய்துமே நமக்கு
           மென்றுளம் விரும்பியேற் றுருக்கொண்