பக்கம் எண் :

1384தணிகைப் புராணம்

 டுத்தமற் பணிய வுரன்முத லருளி
           யூர்தியாக் கினன்விறன் மாலும்
 வித்தகன் புரங்கொன் ஞான்றருள் பெறுவான்
           விடையெனத் தாங்கின னறிதி.

(இ - ள்.) அத்தகைய தொரு திருமாலூழி முடிவு வந்தெய்திய பொழுது உலகம் அனைத்தும் அழியா நின்ற பேரழிவினைக் கண்ணுற்ற அறக்கடவுள் இப்படிப்பட்டதொரு அழிவு நமக்கும் வந்தெய்துதல் ஒரு தலை என்று கருதி, (அதற்குப் பாதுகாப்பாகிய புகலிடத்தைப் பெற விரும்பி) காண்போர் நெஞ்சம் விரும்புதற்குரிய அழகுடைய ஆனேற்றுருவங்கொண்டு சிவபெருமான் திருமுன்சென்று அடைக்கலம் புக்கு வணங்கா நிற்ப அப்பெருமான் அபயமளித்துத் தன்னைச் சுமக்கும் பேராற்றலை முதற்கட் கொடுத்துத் தனக்கு ஊர்தியாக்கிக் கொண்டனன். இனிச் சிவபெருமான் முப்புரத்தை எரித்தருளிய காலத்திலே அப்பெருமானுடைய திருவருட்கிலக்காகும் பொருட்டுத் திருமாலும் ஆனேறாகி அப்பெருமானைச் சுமந்தனன் இதனையும் உணர்வாயாக,

(வி - ம்.) இவ்வாறாக இறைவன் ஏறுகந்தான் காண் என்றவாறு.

(40)

 குரையெரி சவட்டப் பொன்றிய வமரர்
           கோழுட னீறிய நீறு
 நரைநகு தலையு மங்கமுந் தனது
           நல்லுரு நித்தியத் தியல்பும்
 புரைபடு மேனோ ரநித்தியச் செயலும்
           புகர்தபத் தெரிந்தொரு முதல்வன்
 பரையிடங் கொண்டோ னெனவுயிர்த் தொகுதி
           படர்ந்துவீ டுறும்பொருட் டணிந்தான்.

(இ - ள்.) இனிப் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் ஆரவாரமுடைய அப்பேரூழியின் தீயானது அழித்தலானே இறந்துபட்ட தேவர்களுடைய கொழுவிய உடல் நீற்ற வெண்ணீற்றினையும் அவரது வெள்ளிய விளக்கமுடைய தலைகளையும் என்புகளையும் அணிந்து கொண்டனன். எற்றுக் கணிந்தானெனின், தமது இயற்கை அருட்டிரு மேனியினுடைய அழிவில்லாத் தன்மையினையும் குற்றமுடைய பிற தேவருடைய செயற்கை உடலங்களின் அழிவுத் தன்மையையும் உயிரினங்கள் ஐயந்திரிபற உணர்ந்து கொண்டு ஒப்பற்ற முழு முதல்வன் சத்தியைத் தன்னிடத்தே கொண்ட சிவபெருமானே என்று மெய்யுணர்ந்து தன் திருவடிகளை நினைத்து வீடுபேறெய்தும் பொருட்டேயா மென்றுணர்க.

(வி - ம்.) குரையெரி - ஆரவாரமுடைய நெருப்பு. கோழ் - கொழுவிய. நரை நகுதலை - வினைத்தொகையடுக்கு. நரைத்தலை, நக்கதலை என்க.

(41)