பக்கம் எண் :

விடையருள் படலம்1387

 மீன்முகப் பரவை கடைந்தஞான் றாழ்ந்த
           விலங்கலைக் கமடமாய்த் தாங்கும்
 தேன்முகத் துளவோன் செருக்கினாற் றருக்கித்
           திரைகட லிறுதிநாட் போல
 வான்முகத் துலகு மலைப்பநின் றலைப்ப
           வல்விரைந் தோட்டினைப் பறித்துக்
 கான்முகக் கடுக்கைச் சிவபிரா னீறு
           கதிர்த்தமார் பத்திடை யணிந்தான்.

(இ - ள்.) மீனைத் தன்னிடத்தேயுடைய திருப்பாற்கடலைக்கடைந்த காலத்தே அழுந்திய மந்தரமலையை ஆமை வடிவங்கொண்டு தாங்கிய தேனையுடைய துளவ மாலையையுடைய திருமால் செருக்கினாலே தருக்குற்று அலையெறியுங் கடலினை ஊழிமுடிவுக் காலம் போன்று வானின் கண்ணும் உலகத்தின் கண்ணும் புகும்படி கலக்குதலானே சிவபெருமான் மிக விரைந்து போய் அவ்வியாமையோட்டினைப் பறித்து மணமுடைய கொன்றைமாலை யணிந்த திருவெண்ணீறு திகழ்ந்த தனது திருமார்பின்கண் அணிந்தருளினான்.

(வி - ம்.) பரவை - கடல். விலங்கல் - மந்தரமலை.

(46)

 தமனியத் தடங்கட் டானவன் புடவி
           தன்னகத் தடக்கினன் பெயர
 நிமிர்பெரு வரைபோ லேனமாய்த் தொடர்ந்து
           நேர்ந்துயிர் குடித்தனன் மீட்ட
 குமரியந் திகிரிப் படையினான் றருக்கக்
           குறுகியோ ருலவையைப் புயந்து
 திமிரவல் விடநின் றொளிர்மணி கண்ட
           னோட்டொடுஞ் செறிதர வணிந்தான்.

(இ - ள்.) இரணியாக்கன் என்னும் அசுரன் உலகத்தைத் தன்பாலடக்கிக் கொண்டு சென்ற காலத்தே உயரிய பெரிய மலையை ஒத்த பன்றியாக வடிவங்கொண்டு அவனைத் தொடர்ந்து கொன்று மீண்ட அழிவில்லாத அழகிய சக்கரப் படையை யுடைய திருமால் தருக்குதலானே சிவபெருமான் அத்திருமாற் பன்றியை அணுகி அதன் ஒரு கொம்பைப் பறித்துப் பண்டணிந்திருந்த யாமையோட்டோடு நெருங்கும்படி அணிந்தருளினன்.

(வி - ம்.) தமனியத்தடங்கட்டானவன் - பொற்கண்ணன் ; இரணியாக்கன். ஏனம் - பன்றி. குமரி - அழிவற்ற. உலவை - கொம்பு.

(47)

 உடங்குல கனைத்துந் தாட்படுத் தோங்கு
           மிரணிய னுயிர்குடித் தெழுந்த