| | இயக்கும்வண் கருமத் துயர்கதி யடைவா | | | னெண்ணின ரிருந்தவ முழக்கும் | | | செயிர்க்குணத் தாரு வனத்தினர் திருக்கைத் | | | திருக்கவெற் றரையொடுந் தானோர் | | | பயிக்கனாய் நெடுமால் சுந்தர மகளாய்ப் | | | பாங்குறப் படர்ந்தனன் வனத்து. |
(இ - ள்.) உயிர்கட்கெல்லாம் உயிராகவிருந்து அவ்வுயிர்களின் மிக்க இருவினைப் பயன்களை நுகர்விக்கும் நம்பெருமானையன்றி, தாஞ் செய்யா நின்ற வளவிய கருமத்தாலே வீடுபேறடையக் கருதிப் பெரிதும் தவத்தினைச் செய்கின்ற குற்றம் பொருந்திய குணத்தையுடைய தாருகா வனத்து இருடிகளின் மனமயக்கத்தைக் கெடுத்தற்பொருட்டுச் சிவபெருமான் ஆடையில்லாத வறிய அரையோடும் தான் ஒரு பிச்சை ஏற்போனாகி ஓர் அழகுடைய மங்கையுருவங்கொண்ட திருமாலோடு அவ்வனத்தின்கண் அவ்விருடியர்பால் அணுகா நின்றனன். (வி - ம்.) உறுவினை - வினைத்தொகை, நம்மிறைவன் - சிவபெருமான், திருக்கு - மயக்கம். திருக்க - கெடுக்க, பயிக்கன் - இரப்போன். (50) | | தவம்புரி சூழ லரிவைபோய் மருட்டத் | | | தகையெழிற் பனத்தியர் சேரிச் | | | சிவந்தகைத் தலத்துச் சிறுபறை கறங்கச் | | | சென்றுலாய்ப் பலியிட வணைந்தோர் | | | நிவந்தவெங் காமக் கனலுளங் கொளுந்த | | | நிறையொடு கலைவளை மாமை | | | கவர்ந்தனன் றெரிந்து கடவுளை முடிப்பான் | | | கண்ணிவேட் டனரருந் தவத்தோர். |
(இ - ள்.) திருமாலாகிய அம்மடந்தை அவ்விருடிகள் தவம்புரியா நின்ற சூழலிலே சென்று அவரை மயக்கா நிற்ப, எம்பெருமான் தகுதியுடைய அழகிய அவ்விருடி மகளிராகிய பார்ப்பன மகளிர் சேரியின் கண் சிவந்த கைகளினிடத்தே ஏந்திய சிறுபறை முழங்கப்போய் உலாவிப் பிச்சையிடுதற் பொருட்டு வந்த அப்பார்ப்பன மகளிர் எம்பெருமானுடைய திருவுருவங் கண்டுழித் தந்நெஞ்சின்கட் பொங்கி யெழுந்த வெவ்விய காமத்தீத் தம் நெஞ்சத்தை வெதுப்புதல் காரணமாக அவருடைய ஆடை வளையல் நிறம் முதலியவற்றைக் கவர்வானாயினன். அவ் வருந்தவத்து முனிவர் இந்நிகழ்ச்சியினையுணர்ந்து இறைவனாகிய சிவபெருமானை அழித்தற் பொருட்டு ஆபிசார வேள்வியினைச் செய்தனர். (வி - ம்.) அரிவை - திருமாலாகிய பெண். பனத்தியர் - பார்ப்பன மகளிர். உலாய் - உலாவ என்க, கண்ணி - கருதி. (51) |