பக்கம் எண் :

திருநகரப் படலம்139

 ஆதியி றமைந்த பொருள்சிறந் தனவென்
           றருமறை யினிதெடுத் தியம்பும்
 நீதியான் முகத்திற் சிறந்துபூங் கமல
           நிகர்த்தவிர் வேதனார் பதத்தில்
 கோதிலா தெழுந்து வரைதுலாக் கோலும்
           குளிர்ந்தசெங் கோலும்வேய்ங் கோலும்
 தீதிலா மூவர் செலுத்தவேர்ச் சிறுகோல்
           செலுத்துநர் வீதிகள் பலவால்.

(இ - ள்.) முதற்கண் பொதுவிதியாகக் கூறும் பொருள்களைக் காட்டினும் இறுதியிற் சிறப்பு விதியாகக் கூறும் பொருள்கள் சிறப்புடையனவாகுமென்று அரிய வேதங்கள் இனிதாகக் கூறுகின்ற முறையான் நான்கு வேதங்களையும் உணர்ந்த பிரமாவின் (முன்னர்க் கூறப் படும்) முகத்தைக் காட்டினும் சிறப்புற்றுப் (பின்னர்க் கூறப்படும்) பொலிவுபெற்ற தாமரை மலரையொத்து விளங்குகின்ற திருவடியைத் தங்களுக்குப் பிறப்பிடமாகக் கொண்டு குற்றமிலவாகித் தோன்றித் (தன்கண் வைத்த பாரத்தைக்) (குறையாதும் மிகாதும்) வரையறுத்துக் காட்டுகின்ற துலாக்கோலையும் (உலகத்துயிர்கள் இன்புறுதற் கேதுவாகக்) குளிர் செய்கின்ற செங்கோலையும் (பொருட்டன்மையால் அரி, அயன், அரனென்னு முப்பொருளு மொன்றேயெனக் கோடற்பொருட்டுக் கொண்ட) மூங்கிற்கோலையும் குற்றமின்றிய மூவகைச் சாதியாரும் செலுத்த ஏரையோட்டுந் தாற்றுக்கோலைச் செலுத்துநர்களாகிய வேளாண்மாந்தர் வீதிகள் பலவாகும்.

(வி - ம்.) ஆதி என்பதில் இன்சாரியையோடு உம்மையுந் தொக்கதாகக் கொள்க. ஆதியினு மீறு சிறந்தன வென்க. அதுபோல முகத்தைக் காட்டிலும் சிறந்தவிர் பதத்திற் றோன்றிச் செலுத்துந ரென முடிவுசெய்க. வேய்ங்கோல் - மூங்கிற்கோல். சிறுகோல் - தாற்றுக் கோல். இம் முக்கோலும் செல்லற்குக் காரணமாகிய ஏர்க்கோலின ராகலின் அவர் தோன்றிய பதத்தை "முகத்திற் சிறந்தமை பத" மென்றார். "ஒன்றாக நல்லது" என்னுந் திருக்குறளுரையில் முற் கூறியதிற் பிற்கூறியது வலியுடைத்தாகலின் எனப் பரிமேலழகர் கூறியதும் உணர்க.

(101)

 குய்யமா யுயிர்க டோற்றுதற் குரிய
           குறிதமக் கேபிறப் பிடமாய்
 ஐயமுன் வேத னிடத்தவ தரித்திட்
           டதற்கியை தரமறை பிறர்பால்
 வையக மூன்று மொருங்குறு மேனும்
           வழங்கிடா தருநிதி யாக்கி
 உய்யநூல் வகுத்த வொழுக்கினிற் பிறழா
           துழப்பவர் வீதிகள் பலவால்.