| (வி - ம்.) ஓட்டந்தான் - ஒரு சொல் ; ஓடினான். பூரணர் - சிவபெருமான். ஞாளிப்புனிதன் - வயிரவன். ஆரணன் - பிரமதேவன். வடுகன் - வயிரவன். (57) | | விழுந்தயர் பிரமற் குயிரளித் தெழுப்பி | | | மேதினி வரைப்பெலாஞ் சுலாவிக் | | | கொழுந்தவத் தினர்தங் குறும்பறுத் தும்பர்க் | | | குலாயிமை யாரரட் டடக்கி | | | எழுந்துவை குந்த மடுத்தெதிர் விடுவச் | | | சேனனை யேற்றுவண் சூலம் | | | தழுந்தளி யன்பின் மானுதல் வாக்குந் | | | தாரைநெய்த் தோர்கல னேற்றான். |
(இ - ள்.) தரையிலே விழுந்து மூர்ச்சையுற்ற அப் பிரமதேவனுக்கு உயிர் வழங்கி எழுப்பிப் பின்னர் உலகமெலாஞ்சுற்றிக் கொழுவிய தவசியரின் குறும்பை அகற்றிப் பின் வானுலகத்தே சென்று தேவர்கள் குறும்புகளை அடக்கிப் பின் வைகுந்தத்தே எழுந்தருளி விடுவச் சேனனைப் பொருது வளவிய சூலத்தை ஏற்றுத் திருமால் நெற்றியால் வாக்கிய தாரையான குருதியைக் கலத்தின்கண் ஏற்றனன். (வி - ம்.) சுலாவி - சுற்றி. நெய்த்தோர் - குருதி. (58) | | மறிந்துவீழ் மாய னுயிரளித் தேகி | | | வயங்குமேற் புவனங்க ளனைத்தும் | | | செறிந்தவல் லரம்பு காற்றிய பின்றைத் | | | தேவர்மா தவர்க்கெலா மரணாய்ப் | | | பிறங்கிய வண்ட முகட்டின்வீற் றிருந்தான் | | | பிஞ்ஞக னருளினான் முடிவின் | | | உறங்கவெவ் வுலகும் பொடித்துள மகிழ்வி | | | னுலாவுமச் சுடுவனத் தன்றே. |
(இ - ள்.) இறந்து வீழ்ந்த திருமாலுக்கு மீண்டும் உயிர் வழங்கி மேலே விளங்காநின்ற உலகங்களிலே செறிந்த வலிய குறும்புகளை யெல்லாங் களைந்தபின்பு, தேவர்க்கும் முனிவர்கட்கும் பாதுகாவலாகத் திகழ்ந்த அண்டமுகட்டின்கண் வீற்றிருந்தருளினன். உலக முடியும் பேரழிப்புக் காலத்தே சிவபெருமான் பணியை மேற்கொண்டு எல்லா உலகங்களையும் நீறாக்கி அச்சுடுகாட்டின்கண் உலவா நிற்பன். (வி - ம்.) மறித்து - இறந்து. மேற்புவனம் - மேலுலகம். பிஞ்ஞகன் - சிவபெருமான். உறங்க - மருட்கேவலமுறும்படி என்க. (59) |