பக்கம் எண் :

விடையருள் படலம்1397

கூறப்பட்ட பலவேறுருவமுந் தொழிலும் பெயரும் கெடாத அருளையுடைய எம்பெருமான் மேற்கொண்டருளினன்.

(வி - ம்.) அல் - இருள். முழுச்சுடர் - ஞாயிறு. கொல் - அசை. உவை - இவை.

(65)

 பாவக்கட னின்றும ருட்கரையிற்
           பலவாருயி ரும்படர் வித்திடலான்
 மேவுற்றது ருத்திர நாமமிது
           விமலன்வடி வெய்தின ரும்பெறுவார்
 ஆவித்தழு தானழ லோனதனா
           லவற்காயவு ருத்திர நாமமிடர்
 மூவுற்றவ ழற்கல தேனையர்பான்
           முற்றாதழு காரண மும்புகல்வாம்.

(இ - ள்.) தீவினையாகிய கடலினின்றும் திருவருளாகிய கரையின் ஏறும்படி பலவாகிய உயிர்களையும் செலுத்துதலானே எம்பெருமானுக்கு உருத்திரன் என்னும் இத்திருப்பெயர் வந்தது. இப்பெயரை எம்பெருமானேயன்றியும் சாரூபமென்னும் முத்தியினை எய்திய உயிரினத் தோரும் பெறுவர். தீக்கடவுள் ஒரு காலத்தே பெருமூச்செறிந்து அழுதபடியால் இடர்மூளப்பெற்று அவனுக்கு எய்திய உருத்திரன் என்னும் பெயர் அவனுக்கன்றி ஏனையோர்க்குப் பொருந்தாது எனவே இறைவன் பெற்றுள்ள உருத்திரப் பெயர் இதனின்வேறு என்றுணர்வாயாக. அத் தீக்கடவுள் அழுதற்குக் காரணமும் இனி இயம்புவேம் கேட்பாயாக.

(வி - ம்.) உருத்திரன் - தோற்றுவிப்பவன். இன்பத்தைத் தோற்றுவிப்பன் என்றவாறு. உருத்திரன் - அழுபவன். இது தீக்கடவுட்குப் பொருந்துவது. ஆவித்தல் - மூச்செறிதல் ; கொட்டாவி கொள்ளலுமாம்.

(66)

 ஒருஞான்றவு ணர்த்தெற வானவர்செல்
           லுழிமாநிதி யம்பெற முற்றுமழற்
 பெருமானுளி வைத்தம ராலவுணர்
           புறங்கண்டபின் மீண்டவர் நல்குகெனத்
 தருமாறில னாகியு டற்றுதலுந்
           தளர்வுற்றழு தான்றனி மாதவனே
 பொருளாற்புல வோருங்க லாய்ப்பரெனிற்
           புவியோர்கள்க லாய்ப்பது மற்புதமோ.

(இ - ள்.) ஒரு காலத்தே அசுரர்களை வெல்லுதற் பொருட்டு தேவர்கள் போர்மேற் செல்லுங்கால் தம்பாலுள்ள சங்கநிதி பதுமநிதி