முதலிய மாநிதிகளை மீண்டுவந்து பெற்றுக்கோடற்கு தீக்கடவுளிடத்து அடைக்கலமாக வைத்துப்போய் போர்த்தொழிலானே அசுரரைமுதுகு கண்டபின்னர்த் தீக்கடவுள்பால்வந்து அந்நிதிகளைத் தருக என்று கேட்ப அவன் அவற்றைக் கொடுக்க மனமில்லாதவனாய் அத்தேவரோடு போராற்றித் தளர்ந்து ஆற்றாமையானே அழுதனன் ; ஒப்பற்ற துறவியே ! பொருளாசையாலே இங்ஙனம் தேவர்களும் கலகஞ் செய்வாராயின் இந்நிலவுலகத்தினர் அப்பொருள் காரணமாகக் கலாம் விளைத்தல் வியப்பாகுமோ ? (வி - ம்.) ஞான்று - பொழுது. பெற - மீண்டும்பெறுதற்கு. (67) | கனகப்பது மத்தவி சானொருவன் | | கடைநாளொழி காற்பவ மாய்வளர்நாள் | | சனகன்முத னால்வரை யுந்தரவத் | | தனையோர்தவ மாற்றியி ருந்தனர்பின் | | இனமல்குயி ராக்கமு யன்றதுவந் | | தெய்தாமையி னின்னலு ழந்தரியை | | அனகன்படைப் பெய்துவ ரந்தருகென் | | றறவோரொடு சென்றுவ ணங்கினனே. |
(இ - ள்.) ஒரு பேரூழி முடிவுற்றபொழுது பொற்றாமரையாகிய இருக்கையினையுடைய பிரமதேவன் மட்டும் பிறப்புற்று வளர்கின்ற காலத்தே சனகன் முதலிய நால்வரையும் படைத்தருள அந்த நால்வரும் தவநிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் பிரமதேவன் ஆணினமும் பெண்ணினமுமாகிப் பெருகும் உயிரினைப் படைக்க முயன்று அச்செயல் கைகூடாமையானே வருந்திச் சனகன் முதலிய முனிவர்களோடு சென்று திருமாலை வணங்கிப் பெருமானே ! யான் படைத்தற்றொழிலைச் செய்யும் ஆற்றல் பெற வரந்தருக என்றிரந்தான். (வி - ம்.) கனகம் - பொன். பவமாய் - தோன்றி. அனகன் - இறைவன். (68) | என்னான்முடி யாதிது வென்றவரோ | | டேகிக்கழ றாழ்ந்தரி யோதவிறை | | அந்நான்முனி வோரயன் மாலைவிழித் | | தவிர்நுண்பொடி யாக்கியி டத்திணிதோட் | | டென்னாரரு ளேயுமை யாய்வருமா | | திருநோக்கரு ளிப்புடை வைத்தவடன் | | பொன்னார்முலை புல்கிவி ளித்தவரைப் | | பூத்தைம்படை யாற்கிது பேசினனால். |
|