பக்கம் எண் :

1400தணிகைப் புராணம்

 இனிக்கும்புக ழானடி யார்க்கருளு
           மியல்புந்தன மாண்பும்வ ரம்பிலுறா
 முனைக்கும்பட ருள்ளம வித்தருளின்
           முழுகித்திளை மோகம்வி டுந்தவனே.

(இ - ள்.) ஒப்பற்ற மெய்ஞ்ஞானத்திற்கு முதலாகவுள்ள சிவபொருமான் உயிர்த் திரளிற்குச் சான்றாக நின்று தனக்கென்று எப்பயனும் எய்தாதபடி திருவருள் புரிதல் அவன் பெருங்கருணைக்கியல்பாகும் என்றுணர்ந்து கொள்வாயாக. இனி, கேட்டற்குத் தித்திக்கும் புகழையுடைய எப்பெருமான் தன் மெய்யடியார்க்கு அருள்புரியும் தன்மையும் அவனுடைய மாண்பும் எல்லையற்றனவாகும். தவமுடையானே! நீ செருக்காநின்ற துன்பமுடைய மனதையடக்கி எம்பெருமானின் திருவருளிலே மூழ்கிப் பேரின்பமெய்தக் கடவை. அநாதியாயுள்ள நினது மோகம் நின்னை விட்டகலுங் காண்.

(வி - ம்.) பிரான் - சிவபிரான். கேட்டற்கினிக்கும் புகழான் என்க.

(71)

 என்றேமதின் மூன்றுமொ ருங்கவிய
           வெரிமூரலி னானெழு வித்தருளும்
 குன்றாதபெ ருந்தலை மைப்பகவன்
           கோலத்தின யிர்த்தவ யிர்ப்பொழிய
 நன்றோதின னாமவ யிற்படையா
           னவைதீர்ந்துயர் நாரத மாமுனிவன்
 அன்றார்தரு மோகைகி ளப்பவரா
           ரடிதாழ்ந்தன னன்பொடு வாழ்த்தினனால்.

(இ - ள்.) என்றிவ்வாறு அச்சந்தரும் வேற்படையையுடைய முருகப் பெருமான், முப்புரங்களும் ஒருசேர அழியும்படி தன் நகைப்பிலே தீயினைத் தோற்றுவித்தருளிய குறையாத பெருந்தலைமையையுடைய சிவபெருமானுடைய திருக்கோலத்தின்கண் நாரத முனிவன் கொண்டு ஐயங்கள் தீரும்படி நன்குணர்த்தியருளினன். அந் நாரத முனிவனும் குற்றந்தீரப் பெற்று அற்றை நாள் எய்திய மகிழ்ச்சியை யாரே கூறவல்லவர். அம் முனிவன், முருகப்பெருமானுடைய திருவடிகளையப் பேரன்போடு வணங்கிப் பின்வருமாறு வாழ்த்தா நின்றனன்,

(வி - ம்.) மூரலின் எரி எழுவித்தருளும் என்று மாறுக, நாமம் அச்சம்; ஓகை - உவகை.

(72)

 மறையோ லிடுந்தணிகை வள்ள வருளுருவம் வாழி வாழி
 பிறையேர் நுதல்முகத்முப் பேரமைத்தோண் மாதரார் வாழி வாழி
 பேரமைத்தோண் மாதர்ப் பிணைந்துலவும் பேர ருட்கண்
 வாரமிலேன் மாட்டும் வழங்கு மவன்கருணை வாழி வாழி