(இ - ள்.) மறைகள் முழங்குதற்குக் காரணமான திருத்தணிகையின் கண் எழுற்தருளிய வள்ளற் பெருமானுடைய அருளுருவம் வாழ்க! வாழ்க! பிறைபோன்ற நெற்றியமைந்த திருமுகத்தினையும்பெரிய மூங்கில் போன்ற தோள்களையும் உடைய தேவசேனையாரும் வள்ளிநாயகி யாரும் வாழ்க! வாழ்க! வாழ்க! பெரிய மூங்கிலைஒத்த தோளையுடைய அம்மாத ரிருவையும் பொருந்தி உலாவாநின்ற எம்பெருமானுடைய பேரருட் கண்கள் அன்பில்லாத எளியேன் மாட்டும் பொருந்துதற்குக் காரணமான அப்பெருமானுடைய பேரருள் வாழ்க! வாழ்க! (வி - ம்.) ஓலிடும் - முழங்கும். வள்ளல் - முருகப்பெருமான். அமை - மூங்கில். வாரம் - அன்பு. (73) வேறு | நாத தப்பெயர் முனிவரன் விடைபொடு நடந்தான் | | ஆர ணம்பயி லகோரனென் றந்நணன் மலநோய் | | தீர வெண்ணின னடுத்தனன் றீர்த்தங்க ளாடி | | ஆர வந்ானை புரிந்தரு ளான்முத்தி யடைந்தான். |
(இ - ள்.) நாரத முனிவன் இவ்வாறு இறைவனை வாழ்த்தி விடைபெற்றுப் போயினன். இனிமறைகளைப் பயிலா நின்ற அகோரன் என்னும் அந்தணன், மலப்பிணி தீர்தற்கு நெடிது எண்ணித் திருத்தணிகை மலையினையடைந்து ஆண்டுள்ள புண்ணிய தீர்த்தங்களிலே ஆடி உளமார முருகப்பெருமானை வழிபட்டு அப்பெருமானருளால் வீடு பேறடைற்தனன். (வி - ம்.) ஆரணம் - வேதம். என்ற அந்தணண்ள - அகரந்தொக்கு என்றந்கணன் என்றாயிற்று. மலநோய் - பிறப்பு. (74) | விண்டு தீர்த்தம் வெய் யவன்றினம் வெண்மதி வாரத் | | தண்ட ராட்டறாச் சிவகங்கை யலைநதி யிரண்டும் | | தொண்டர் போற்றிய நாரதன் சுனையொடு நாகம் | | கண்ட தீர்த்தமுங் கண்ணகன் புவிமகன் வாரம். |
(இ - ள்.) திருமால் தீர்த்தத்திலே ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையில் தேவர்கள் ஆடுதலொழியாத சிவகங்கையினும் அலையுடைய இரண்டியாறுகளினும் மெய்யடியார் போற்றாநின்ற நாரதன் சுனையினும் நாகங்கண்ட தீர்த்தத்தும் செவ்வாய்க் கிழமையில், (வி - ம்.) விண்டு - திருமால். வெய்யவன் தினம் - ஞாயிற்றுக்கிழமை. புவிமகன் வாரம் - செவ்வாய்க்கிழமை, (75) | பிரம தீர்த்தத்துப் புதன்றினம் பிலிற்றுதேங் காவி | | விரவு தீர்த்தத்து வியாழத்தின் கிழமைவெள் ளியினாள் | | பரவு சீர்ப்பெருங் குமாரதீர்த் தம்பகர் சனிநாள் | | உரவு நீர்க்குறு முனிசுனை யுற்றவன் படிந்தான், |
|