பக்கம் எண் :

142தணிகைப் புராணம்

(இ - ள்.) குற்றமற்ற (நால்வகைக் கவியை யாவரும் வியக்கப் பாடுவோனாகிய) கவிக்கு ஒரு கவியும், (நூலின்கட் செறிந்து கிடக்கு மரும்பெரும் பொருளினைச் செம்பொருளாக யாவருமறியும் வண்ணம் விரித்துச் சொல்லும்) கமகனுக்கு ஒருமகனும், (மேற்கோளும் ஏதுவும் உதாரணமும் உபநயமும் நிகமனமும் காட்டிப் பிறன் கூற்றை மறுப்பவனாகிய) வாதிக்கொரு வாதியும், குற்றமற்ற (அறம்பொருளின்பங்களைக் கேட்போர் விரும்பும் வண்ணம் கூறும்) வாக்கிக் கொருவாக்கியும் ஆகியவர்கள் பண்டைக்காலம் தொடங்கிப் பொருந்திச் சான்றோரிடத்து முறைப்பட்டுவந்த கல்வி கேள்விகளை யுடையவர் (பிறராக்கம் கண்ட வழிப்) பொறாது வருகின்ற பகையை வென்ற கூரிய புத்திநுட்ப முடையாராகிய இவர்கள் மேற்கூறிய தன்மையோடு நூலின் பயிற்சி இன்பெனக்கொண்டு நூல்களை யாராய்கின்ற கலைதெரி மண்டபங்கள் பல விளங்கும்

.

(வி - ம்.) பட்டிமண்டபம் - கலைதெரி மண்டபம். "பட்டிமண்டபத்துப்பாங் கறிந்தேறுமின்" எனவரும் மணிமேகலையானும், "பட்டிமண்டப மேற்றினை" என்னும் திருவாசகத்தானு மறிக.

(106)

 அறிதரா தியற்றும் புண்ணிய நிரம்பி
           யறிந்துபல் புண்ணியம் புரிவோர்
 மறிதரா தகத்துச் சரியைமுன் னான்கும்
           வழுத்தப வியக்குந ருண்மை
 நெறியினா லந்த நான்கினுங் கருத்தை
           நிறுத்துந ராயசீ ரடியார்
 பிறிதரா தமர்ந்து தத்தம தியல்யு
           பேணிவா ழிருக்கைக ளனந்தம்.

(இ - ள்.) அபுத்தி பூர்வபுண்யம் நிறையப்பெற்றுப் புத்தி பூர்வமாகப் பல புண்ணியங்களைச் செய்கின்றவர்களும், மடங்காது அகத்தினிடத்தே உபாயச்சரியை, உபாயக்கிரியை, உபாயயோகம், உபாயஞானமாகிய நான்கினையும் குற்றம் நீங்கச் செய்கின்றவர்களும், உண்மை வழியான்வந்த உண்மைச்சரியை, உண்மைக்கிரியை, உண்மையோகம், உண்மைஞான முதலிய நான்கினிடத்து நிறுத்துகின்றவராகிய சிறப்புப் பொருந்திய அடியார்களும் நீங்காதமர்ந்து தங்கடங்கள் ஒழுக்கங்களைப் போற்றி வாழ்கின்ற இருக்கைகள் பலவாம்.

(வி - ம்.) புத்தி பூர்வ அபுத்தி பூர்வபுண்யங்களும், உபாயச்சரியை முதலிய நான்கும், உண்மைச்சரியை முதலிய நான்குமாகிய பத்தும் சிவபுண்ணியமெனப் பெயர் பெறும். இப் பத்தினுள் முற்பட்ட ஒன்பதும் மலநிலையமாகும். பிற்பட்ட ஒன்று அருணிலையாகும்.

(107)

 மும்மலச் செருக்கை முதலொடு முருக்கி
           முழுத்தபே ரறிவெனக் கிளைத்த
 விம்முயிர் கெடுத்து வீங்கிய வருளை
           வியங்கொளுந் திருக்கினை மிளிர்த்துச்