பக்கம் எண் :

திருநகரப் படலம்143

 செம்மைமெய் யருளைக் கடந்தொளிர் சிவத்திற்
           றினகர விழியெனக் கலக்கும்
 இம்முறை யுண்மை ஞானமீ ரைந்து
           மியங்குநர் மடங்களெண் ணிலவால்.

(இ - ள்.) ஆணவம், மாயை, கன்மமென்னு மூவகை மலங்களின் தருக்கை வேரொடுங் கெடுத்து, முதிர்ந்த அறிவே வடிவானவன் யானென்றெழுந்த மிக்க உயிரின் தன்மையைக் கெடுத்து மிக்க அருளினை ஏவல்கொள்ளும் அறிவினை விளங்கச்செய்து தெப்பமாகிய அருளைக் கடந்து விளங்குகின்ற சிவத்தினிடத்தில் கதிரொளியும் கண்ணொளியும் பேதமின்றி அத்துவிதமாகக் கலத்தல்போல அத்துவிதமாகக் கலக்குமிம்முறையாகிய உண்மை ஞானம் பத்தினும் ஒழுகுகின்ற அடியார்கள் மடங்கள் பலவாம்.

(வி - ம்.) முற்செய்யுளிற் கூறப்பெற்ற பத்தினுள் ஈற்றினின்ற உண்மை ஞானமொன்றே, தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகமெனப் பத்தாகும். இவை தசகாரியமெனப் பெயர்பெறும். இவற்றுள் சிவபோகம் நீங்கிய ஒன்பதும், சுத்தசாக்கிர முதலிய நான்கவத்தையினடங்கும். சிவபோகம் துரியா தீதத்தினடங்கும். இச்செய்யுளில், "மும்மலச் செருக்கை முதலொடும் முருக்கி" யென்பதனாற் றத்துவரூப முதலிய மூன்றும். "முழுத்தபேரறிவெனக் கிளைத்த விம்முயிர் கெடுத்து" என்பதனால் ஆன்மரூப முதலிய மூன்றும். "வீங்கிய அருளை வியங்கொளுந் திருக்கினை மிளிர்த்து" என்றதனால் சிவரூபம் சிவதரிசனம் ஆகிய இரண்டும். "செம்மை மெய்யருளைக் கடந்து" என்பதனால் சிவயோகமொன்றும், "ஒளிர்சிவத்திற் றினகரவிழியெனக் கலக்கும்" என்பதனால் சிவபோக மொன்றுந் தோன்ற நின்றமை காண்க.

அறிவெனக் கிளைத்தஉயிர் - இயல்பின் ஞானவடிவமாகிய உயிர். செருக்கு - தருக்கு. முதல் - வேர். முருக்கி - கெடுத்து. உயிர்கெடுத்து-ஆத்மபோதத்தைக் கெடுத்து. வியம் - ஏவல். திருக்கு - அறிவு. தினகரவிழி - கதிரொளியோடு அத்துவிதமாகக் கலந்த கண்ணொளி.

(108)

 அலகில்பல் லுயிரு முயிர்த்ததம் மாமி
           யருளிரு நாழிநெல் லேகொண்
 டிலகறம் வளர்த்தா ளெனுமிழுக் ககல
           விருநிதி வேண்டின வெல்லாம்
 குலவரைக் கிழவன் கொடுத்திட வாங்கிக்
           கோதைய ரிருவரும் வளர்ப்ப
 நிலவிநிற் பனபோற் பலவறச் சாலை
           நித்தலும் வயின்றொறுந் தழையும்.

(இ - ள்.) கணக்கிடப்படாத பல உயிர்களையுமீன்ற தங்கள் மாமியார் இறைவனளித்த இரண்டுபடி நெல்லையே ஆதாரமாகக்