| அருஞ்சொற்பொருள் அகரவரிசை | 1443 |
| அருஞ்சொற்பொருள் அகரவரிசை
| எண் | பக்கம் எண் | | ஆயனான் - தாயைப்போன்றவன் | 1325 | | ஆயன் கொன்ற மரம் - இடையனால் தழையரியப்பட்ட மரம் | 862 | | ஆயன் படை - ஆழி | 755 | | ஆரணப்பிரான் - நான்முகன் | 96 | | ஆரணன் - நான்முகன் | 4 | | ஆரம் - முத்து | 29 | | ஆரல் - கார்த்திகை மீன்கள் | 414, 945 | | ஆரிடம் - ஆகமம் | 882 | | ஆரிய - உண்ண | 88| ஆரியனாமமலன் | 745 | | ஆரியன் - ஆசிரியன் | 506 | | ஆரூடம் - ஏறுதல் | 185,335 | | ஆர் - ஆத்திமாலை | 251 | | ஆர்த்தல் - முழங்குதல் | 32 | | ஆர்த்தி - நிறைத்து | 206 | | ஆர்த்தினன் - நிறைத்தனன், ஓதினான் | 264, 454 | | ஆலவாலம் - பாத்தி | 1128 | | ஆலா - முழங்கி | 651 | | ஆலிய - முழங்கிய, அசைகின்ற | 48, 232 | | ஆலும் - முழங்கும் | 274 | | ஆலை - இயந்திரம் | 72 | | ஆலோலம் - புள்ளினை விரட்டும் ஒலி | 924 | | ஆவச்சகாயன் - தணிகையில் உள்ள ஒரு விநாயகர் பெயர் | 266 | | ஆவணம் - அங்காடித் தெரு | 133, 1168 | | ஆவநாழிகை - அம்புக்கூடு | 937 | | ஆவயின் - அவ்விடத்தே | 865 | | ஆவி - தடாகம் | 88 | | ஆளாநிறை - ஆளாத மிடா | 908 | | ஆறலைத்தல் - வழிச்செல்வோரை வருத்தல் | 27 | | ஆற்றல் வகைமை - அறிவு வளர்ச்சியின் படிமுறை | 531 | | ஆற்றி - நீக்கி | 375 | | ஆற்றுக்காலாட்டியர் - மருத நிலப் பெண்கள் | 59, 61 | | ஆனனம் - முகம் | 59 | | ஆனாத - அமையாத | 297 | | ஆனைந்து - பஞ்சகௌவியம் | 573 | | ஆன் - அவ்விடம் | 214 | | ஆன்மயம் - சாணகம் | 908 | | ஆன்முலையமிழ்தம் - பால் | 17 | | இகந்த - இகழ்ந்த | 641 | | இகந்தரும் - இகுத்த | 533 | இகந்தல் - நீங்கல் | 215 | | இகப்பறுதல் - நீங்குதலை ஒழித்தல் | 130 | | இகப்புறினும் - நீங்கினும் | 120 | | இகப்புறும் - குறையும் | 502 | | இகவு - நீக்கம் | 217 | | இகவு முற்றினும் - நீங்குதல் அடையினும் | 57 | | இகுசநற்கனி - எலுமிச்சம் பழம் | 611 | | இகுதல் - கெடுதல் | 519 | | இகுத்தி - இறக்கி | 1164| இகுப்போர் - நீக்குபவர் | 249 | | இகும் - இழிந்த | 221 | | இகைவார் - குதிரைச் சமட்டி | 109 | | இங்குலிகம் - சாதிலிங்கம் | 20, 742 | | இசும்பு - வழுக்குநிலம் | 169 | | இசும்புதல் - வழுக்குதல் | 682 | | இடங்கம் - கல்லடிக்கும் உளி | 425 | | இடங்கர் - முதலை | 120 | | இடங்கழி - நெருங்கி, போர் | 695, 1091 | | இடபயோனி | 636 | | இடம்பட - மிகுதியாக | 1054 | | இடவிய - இடமான | 230,336,1264 | | இடிபொரும்பணை - இடியைப் போல் முழங்கும் முரசம் | 798 | | இடுகு - இடுவேன் | 1021 | | இடுகுதல் - சுருங்குதல் | 669 | | இடுக்கண் - இன்னல் | 32 | | இடுதல் - தாழ்தல் | 809 | | இடைந்து - தோல்வியடைந்து | 637 | | இடைவித்தல் - அடக்கல் | 334 | | இட்டி - செங்கல் | 624 | | இட்டிடை - சுருங்கிய இடை | 1194 | | இணர் - கொத்து | 32 | | இணைமுரசு - இரட்டை முரசு | 1272 | | இணைய - ஒப்ப | 37 | | இணைவிழைச்சு - சேர்க்கை | 475 | | | |
|
|
|