742 இதண் - பரண் | 924 |
இந்தியமா - பொறிகளாகிய விலங்குகள் | 178 |
இந்திரஞாலம் - சூரனுடைய தேர் | 736 |
இந்திர திருவில் - வானவில் | 1197 |
இந்திரத் தீவு | 613 |
இந்திர நகரி | 189 |
இபமா - யானை | 343 |
இபமுகத்தான் - ஆனைமுகக் கடவுள் | 4 |
இபம் - யானை (ஈண்டு) ஐராவதம் | 18 |
இமில் - விடையின் முரிப்பு | 230 |
இமிழ் - இனிமை | 538 |
இமிழ்தல் - இளகுதல், வீசுதல் | 333,470 |
இம்மை - இப்பிறப்பு | 861 |
இயக்கமாற்றல் - இயங்குதலைத் தடுத்தல் | 168 |
இயப்பேரொலி - வாத்தியப் பெரு முழக்கம் | 155 |
இயைந்திலை - உடன்பட்டா யில்லை | 1197 |
இயையும் - ஒத்துத் தோன்றும் | 30 |
இயவர் - இசைக் கருவியினை யுடையோர் | 1235 |
இயவை - எட்டுயூகை, வழி | 602,653,1234 |
இயாணர் வண்மை - புதிதாகிய வள்ளல் தன்மை | 162 |
இரசதம் - வெள்ளி | 435 |
இரசித அம்பலம் - வெள்ளி யம்பலம் | 95 |
இரட்டும் - பாடும் | 31 |
இரணம் - போர், கடமை | 251,1317 |
இரணிய கண்டம் | 609 |
இரணியம் - பொன் | 144 |
இரணியன் - சூரன்மைந்தன் | 777 |
இரண்டுவா - அமாவாசி, பூரணி | 575 |
இரதங்கள் - பழச்சாறுகள் | 264 |
இரந்தரம் - வானம் | 895 |
இரமிய கண்டம் | 609 |
இரவு வளஞ்செய் கதிர் - திங்கள் | 66 |
இரித்தல் - ஓட்டல் | 411 |
இரித்து - கெடுத்து | 3 |
இருகுவளை - கருங்குவளை, செங்குவளை | 120 |
இருடி விந்தியம் | 184 |
இருட்கண்டத்தவர் - சிவ பெருமான் | 1228 |
இருது - பருவம், மகளிர் பூப்பு | 329,513 |
இருநாகம் - பாம்பு, யானை | 172 |
இருந்தாய் - பெரிய தாய் | 1133 |
இருந்தை - கரி | 42 |
இருப்பனகள் - இருப்பன | 258 |
இருமை - கருமை | 754 |
இரும்போதம் - மெய்யுணர்வு | 902 |
இருவி - இருத்தி, தினைத்தாள் | 22, 245,862,1150 |
இருளரவம் - ஆணவமாகிய பாம்பு | 343 |
இருள் அளை - இருள் பொருந்திய குகை | 245 |
இரேசகம் - மூச்சுவிடுதல் | 567 |
இலங்கை | 613 |
இலஞ்சி - மடு, பொய்கை | 4749 |
இலம்பகம் - நெற்றிச்சூட்டு, தலைக்கோலம், மாலை | 303,643,891 |
இலிற்றுதல் - பொழிதல் | 1297 |
இலீக்கை - எட்டுக்கசாக்கிரகம் | 602 |
இல்லாத்துப்பினர் - வறியவர் | 496 |
இவர்தர - ஏற | 324 |
இவர்தல் - எழுதல் | 110 |
இவர் மனம் - காமப்பற்றுடைய மனம் | 129 |
இவற்றுத்தொழில் - ஆசைத் தொழில் | 290 |
இழத்திய - இழக்க | 1219 |
இழிவார் - இறங்குவார் | 70 |
இழுகி வீழ்ந்த - பரவிக் கீழ் விழுந்த | 444 |
இழுது - நெய் | 333,526,1294 |
இழுதை - அறிவின்மை | 311 |
இழுதையர் - தீவினைமாக்கள் | 522 |
இழைத்தல் - செய்தல் | 30 |
இளகு - தளிர்த்த | 31 |