பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1445

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
இளமரக்கா - உய்யானம் 1003
இளம்பகை - முற்றாப்பகை 1052
இளவல் - பின்னவன் 1
இளாவிரத கண்டம் 609
இளி - ஒரு பண் 605
இளையோன் - முருகக் கடவுள் 6
இறந்தநீர் - மிகுந்த நீர் 55
இறந்தான் - சென்றான் 660
இறலி - இற்றி 611
இறால் - தேனடை 33
இறுக்கும் - கொல்லும் 869
இறுங்கு - சோளம் 81
இறுத்தல் - தங்குதல், கெடுதல் 18,346,386
இறுத்து - கெடுத்து 61
இறுப்ப - கெடுக்க 6
இறுப்பது - அறுப்பது 72
இறுமாத்தல் - செருக்குறல் 433
இறுமுடல் - தூலவுடல் 355
இறும்பு - குறுங்காடு 1123
இறும்பொழுது - இறக்குங் காலம் 389
இறை - இறைமைத் தன்மை, சிறை 6,325
இறைகொளல் - தங்கல் 1118
இறைவ - சிதறுவ 34
இற்செறித்தல் - மனையில் வைத்தல் 32
இற்றகாலை - முடிவுற்றபோழ்து 12
இற்றவா - கெட்டவிதம் 225
இனக்குரீஇ - குருவிக் கூட்டங்கள் 88
இனம்பு - இனியநீர் 438
இனாத - துன்பம் 284
இனாதநூல் - புறச்சமய நூல் 354
இனைதல் - வருந்துதல் 516
இனைய - வருந்த 278
இனைவர் - வருந்துவர் 33
இனைவித்தி - வருந்தச் செய்கின்றாய் 308
இனைவு - துன்பம் 35
இன்பவிளைவு - தவத்தொழில் 1401
இன்னாங்கு - தீமை 863
இன்னினி - இப்பொழுது 221
ஈட்டம் - கூட்டம், பொருள் 50,1227
ஈர்ம்பனி - மிகுந்த குளிர்ச்சி 443
ஈழம் - பொன், பொற்கயிறு 935,1066
ஈனமீரும் - துன்பங்களைக் கெடுக்கின்ற 420
ஈன் - இவ்விடம் 240
உக - கெட 111
உகப்பு - உயர்ச்சி 116
உகவீழ்விளைவு - சிந்தவீழ்கின்ற விளைவு 68
உகளம் - இரண்டு 423
உகுக்கும் - சிந்தும் 30
உகுத்தல் - சிந்துதல் 391
உகுபிறப்பு - கெடுகின்ற பிறப்பு 166
உகைக்கும் - செல்லும் 36
உகைப்பது - செலுத்துவது 1197
உக்கு - வீழ்ந்து 584
உக்குன்று - இக்குன்று 973
உங்ஙனம் - இவ்விடம் 245
உசிரம் 182
உஞற்றுதல் - செய்தல் 10
உடங்கிய - சேர்ந்த 1215
உடங்கு - ஒருசேர, கூட 67,472, 640
உடங்குபடர் - கூடச் செல்லுகின்ற 217
உடம்பிடி - வேல் 970
உடலல் - விரோதித்தல் 285
உடலுதல் - அழித்தல் 498
உடலும் - மாறுபடுகின்ற 109
உடற்றுதல் - வருத்துதல் 14
உடற்றுபயன் - வருத்துகிற தீவினைப்பயன் 309
உடற்றுபு - உடற்றி 521
உடற்றுழி - போர் செய்த காலத்தில் 19
உடைநாள் - வாழ்நாள் 659
உடைந்த - விரிந்த 449
உடையவர் - ஆள்வோர் 1401
உட்கல் - வருந்தல், நாணல்664,730
உட்சூழல் - உள்ளிடம் 206
உணக்கல் - வாடல் 1175
உணங்குதல் - காய்தல் 1040
உணர்ந்துணர்த்தும் பாணி - ஊடலைத் தீர்க்குங் காலம் 73
உதக்குத் திசை - வடக்குத் திக்கு 597