பக்கம் எண் :

1446தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
உதரக்கனல் - வயிற்றுத்தீ 550
உதவி கொல்கொலை - செய்ந் நன்றி மறத்தல் 400
உதனுக்கு - இதற்கு 844
உதன்மேல் - உகரம் நடுவிடத்தைச் சுட்டியது 260
உதிர் - தூள் 752
உத்தராசங்கம் - மேலாடை 1008
உத்தன் - தலைவன் 1282
உத்தாலக ஆரணியம் - குற்றாலம் 275
உத்தாலக நகரம் 182
உத்தாலகம் 181
உந்தி - நீர், ஆறு 420,679
உபபாதகம் - தீவினைகட்கினம் 504
உபயம் - இரண்டு 428
உபயோகம் - துணைச்செயல்கள் 566
உபேந்திரன் - திருமாலின் ஒரு கூறானவன் 1358
உப்புடை கண்டு - புறங்கண்டு 313
உப்பொழில் - அந்தப் பொழில் 1066
உமிழும் - வெளிப்படுத்துகின்ற 46
உமைபாகன் மாப்படை - பாசுபதக்கணை 785
உமையிறைவனாப்பண் மகவு - சோமாஸ்கந்தர் 704
உம்பர்காவலன் - இந்திரன் 888
உம்பர் பனித்து - மேலே துளித்து 107
உம்பர்பிரான் - முருகன் 845
உம்பல் - யானை 32
உம்பன் - தேவன் 46
உம்பி - உன்னுடைய தம்பி 686
உயங்க - வருந்த 308
உயங்குதல், வருந்துதல் 36, 294
உயிரின் துரிசு - ஆணவமலம் 470
உயிரோரன்ன - உயிரை யொத்த 1157
உயிர் - காற்று 750
உயிர் தணிவுறுதல் - ஆன்ம போதங் கெடல் 334
உயிர்த்தல் - வெளிப்படல், சொல்லுதல் 977,1151
உயிர்த்தளித்தல் - பெற்றுக் காத்தல் 16
உயிர்த்தான் - தந்தை 551
உயிர்பிறந்தவர் - அறிவு தோன்றப்பெற்றவர் 176
உய்த்தல் - உணவுண்ணச் செய்தல் 1143
உய்யானம் - இளமரச்சோலை 110
உரகத்து நாடு - நாகலோகம் 1248
உரகம் - பாம்பு 592
உரம் - அறிவு 288
உரவு - வலிமை 34
உரலல் - ஒலித்தல் 1146
உரற்றும் - ஒலிக்கின்ற 181
உரன் - ஞானம் 168
உராய் - பெயர்ந்து 22, 169
உராவுறல் - நிலைபெயரல் 678
உரிஞுதல் - உராய்தல் 70
உரு - உட்குதல் 223
உருத்திரன் - சீகண்ட பரமசிவன் 563
உருத்து - சினந்து 984
உருப்பம் - வெப்பம் 326
உருப்பான் - சுடுவான் 1237
உருப்பு - வெப்பம் 1167
உருமின் - இடிபோல் 32
உருமேறு - பேரிடி 524
உருவறுதி - நிட்களம் 567
உருவன் - அழகுடையவன் 682
உருவிப்பர் - வருத்துதலைச் செய்யும் 27
உருவிற்றொழில் - உருவத்தைப் படைக்குந் தொழில் 1302
உருவேறாக - நாடோறும் வளர்தல் 923
உரோசனை - கோரோசனை 474
உலகதருமணி - சபீசதீக்கையில் ஒன்று 574
உலண்டு - பட்டுப்புழு 239
உலத்தல் - எண்ணிமுடிதல் 700
உலந்தமணி - திரண்ட மணி 1146
உலப்பற்ற - அளவற்ற 42
உலப்பில் - அளவில்லாத 224
உலமந்த - வருத்துகின்ற 275
உலம் - திரண்ட கல் 997
உலம்பல் - சுழலல் 827
உலம்பியது - முழங்கியது 217,232