அருஞ்சொற்பொருள் அகரவரிசை | 1447 |
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
எண் | பக்கம் எண் | உலம்புதல் - முழங்குதல் | 182, 445,923 | உலம்பும் - பிளிறும் | 456 | உலவாமருந்து - அமுதம் | 121 | உலவை - கொம்பு | 527,580,893,1131 | உவணம் - கருடன் | 168 | உவளகமுற்று - பாதலத்தை யடைந்து | 391 | உவளகம் - அந்தப்புரம் | 177,980 | உவா - நிறைவு, யானை | 1131, 1179 | உழக்கி - கலக்கி | 22 | உழந்து - செய்து | 18,19 | உழப்பவர் - வருந்துவோர் | 71 | உழப்பு - முயற்சி | 1037 | உழப்போர் - செய்பவர் | 1038 | உழலை - உழலைமரம் | 44 | உழால் - உழுதல் | 1280 | உழிதருதல் - இருத்தல் | 1346 | உழுவை - புலி | 32,330 | உழை - மான் | 287 | உளக்கசிவு - அன்பு | 870 | உளத்திசைவு - உடன்பாடு | 871 | உளர - துள்ள | 659 | உளரிய - தெரித்த | 1064 | உளருதல் - கிண்டுதல் | 274 | உளர்தல் - தடவல் | 48 | உளர்தோகை - இறகை மூக்காற் கிண்டுகிற மயில் | 329 | உளியம் - கரடி | 1247 | உளை - பிடரி மயிர், பண் | 231,1012 | உளைதல் - வருந்துதல் | 71 | உள்ளகம் - மனம் | 113 | உள்ளுதல் - விரும்புதல் | 77 | உறந்த - தங்கிய | 312 | உறழும் - ஒக்கும் | 260 | உறள்தல் - பெருக்கல் | 636 | உறுத்தல் - சேர்த்தல் | 1004 | உறுத்தவன் - சேர்த்தவன் | 1 | உறும் - மிக்க | 276 | உறுவர் - முனிவர் | 120 | உறை - மேற்போர்வை | 262 | உறையுள் - வீடு | 553 | உற்பலம் - நீலோற்பலம் | 598 | உற்பலவரை - காவியத்திரி | 194 | உற்பவம் - பிறப்பு | 164 | உற்பனம் - உற்பாதம்; பின்வருந் தீமைக்கறிகுறி | 747 | உன்னலர் - எண்ணாதவர் | 68 | ஊகம் - கருங்குரங்கு | 115 | ஊக்கம் - உயர்ச்சி | 64 | ஊக்குதல் - அடித்தல் | 751 | ஊசி - எழுத்தாணி | 477 | ஊணிகள் - உண்பவை | 438 | ஊண்முறை - உண்ணுந் தகுதி | 13 | ஊர் - பரிவேடம் | 649 | ஊழிநாயகன் படை - காலாக்கினி ருத்திரப்படை | 851 | ஊழ் - முறை | 21 | ஊழ்க்கும் - உதிர்க்கும் | 32 | ஊழ்தினை - பதனழிந்த தினை | 32 | ஊழ்த்த - பதனழிந்த | 86,926 | ஊனுறு நுகர்ச்சி - உடலளவாய் நுகரத்தக்க நுகர்ச்சி | 377 | ஊன்தலை - புலால் போன்ற உச்சிக்கொண்டை | 425 | எஃகு - படைக்கலம் | 178 | எக்கர் - மணற்குன்று | 112 | எக்கழுத்தம் - இறுமாப்பு | 804,674 | எட்கு - கரடி | 1131 | எண்கணன்னம் - நான்முகன் | 939 | எண்காற்குருகு - சரபம் | 758 | எண்டலையேலார் - ஆராய்தலைத் தம்மிடத்து ஏற்றுக்கொள்ளாதவர் | 1040 | எப்புர - எம்மைக் காக்க | 1340 | எமி - கூட்டம் | 1149 | எமியை - எம்மையுடையை | 849 | எம்மையும் - எப்பிறப்பினும் | 420 | எயிற்றிமார் - வேடுவப் பெண்கள் | 27 | எயினர் - வேடர் | 27 | எய்த்தல் - இளைத்தல், அறிந்து | 130,282,660,1003 | எய்யாமை - அறியாமை | 1142 | எய்யாம் - இளையாம் | 291 | எரி - வேள்வித் தீ | 487 | எரியுறுநீர் - வெந்நீர் | 574 | எருக்கி - அடித்து | 223,780,1264 | எருக்கினன் - புடைத்தான் | 816 | எலுவி - தோழி | 1192 | எல் - ஒளி | 409 |
|
|
|