அருஞ்சொற்பொருள் அகரவரிசை
எண் | பக்கம் எண் | எல்லகாத்திருப்பதி - வானுலகம் | 411 | எழால் - யாழ், நரம்பிசை | 891,925,1280 | எழினி - வளைந்த தூண் | 936 | எழீஇ - செய்து | 18 | எழு - தூண் | 1209 | எறுழ் - வலி | 32,216 | எற்பக்கேவலை - என்பக்கம் செலுத்தாதே | 149 | எற்றல் - உதைத்தல் | 751,1204 | என்றூழ் - கதிரவன் | 183,302,787,1166 | என்னரும் - எத்தன்மையுடைய வரும் | 203 | ஏகதேசம் - ஓரிடத்திருத்தல் | 546 | ஏகநாயகன் - சிவன் | 1288 | ஏசற - கவலையடைய | 134,165,1148 | ஏடகம் | 185 | ஏட்டை - அவா, இளைப்பு 1 | 61,215 | ஏண் - பெருமை | 803 | ஏதம் - துன்பம் | 18 | ஏதம்நீவு - துன்பத்தைத் துடைக்கின்ற | 164 | ஏதின்மை - யாதுந் தொடர் பின்மை | 1230 | ஏத்திருந்தும் - அம்புகளால் திருத்தமடையும், போற்றுதலிருந்தும் | 103 | ஏந்தலறிவு - இறைஞானம் | 1261 | ஏந்தல் - உயர்ந்தோன் | 420 | ஏமகூடமலை | 609 | ஏமம் - காவல், இன்பம் | 13,966 | ஏமனார் - மறலி | 895 | ஏம் - ஏவும் | 621 | ஏம்பல் - விம்மிதம் | 1303 | ஏய்க்கினும் - பொருந்தினும் | 59 | ஏய்த்தல் - செலுத்தல் | 374 | ஏய்த்து - இணைத்து | 164 | ஏய்ப்ப - ஒப்ப, சேர்ப்ப | 6,247 | ஏய்ப்பவர் - அறிவுறுத்துபவர் | 168 | ஏரணவிய - அழகு பொருந்திய | 263 | ஏர்ச்சிறுகோல் - ஏரோட்டுந் தாற்றுக்கோல் | 139 | ஏர்த்த - அழகு பொருந்திய | 426 | ஏர்பு - எழுதல் | 70 | ஏல்வை - காலம் | 222, 744 | ஏவம் - இவ்விதம் | 104 | ஏவற்றேவர் - பரிவார தேவதைகள் | 550 | ஏவுபு - ஏவி | 820 | ஏற்றம் - துணிவு | 659,1189 | ஏற்றி - நினைத்து | 1164 | ஏற்றிய - கருதிய | 1144 | ஏற்றுதல் - உயர்த்தல் | 751 | ஏனம் - தினைப்புனம் | 35 | ஐ - வியப்பு | 69 | ஐங்கோ - சமனை முதலிய ஆன்கள் | 624 | ஐது - அழகு | 54 | ஐந்தென நண்ணமிர்து - பஞ்சாமிர்தம் | 264 | ஐம்படைவாளி சுமந்த அண்ணல் - திருமால் | 337 | ஐய - அழகிய | 146 | ஐவனநெல் - மலைநெல் | 1288 | ஐவாய் - ஐந்திடம் | 422 | ஒக்கல் - சுற்றத்தார் | 401 | ஒட்டலான் - பகைவன் | 760 | ஒட்பம் - தூய்மை | 757 | ஒண்மை - அறிவின் தெளிவு | 1175 | ஒதுங்கல் - நடத்தல் | 923 | ஒப்பித்தாம் - அழகு செய்ய அணிந்தோம் | 1311 | ஒருக்கி - வருத்தி, ஒடுக்கி | 297 | ஒருக்கு - ஒறுங்கு | 870 | ஒருக்குதல் - ஒருவழிப்படுத்துதல், கெடுத்தல் | 129,383 | ஒருங்கர - ஒருசேர | 304 | ஒருங்கல் - ஒடுங்கல் | 145 | ஒருத்தல் - ஆண் யானை | 1197 | ஒருபான் - ஒருபத்து | 490 | ஒருமித்தவர் - கலந்தவர் | 489 | ஒருமுதல் - ஏகனாகிய இறைவன் | 482 | ஒருவுதல் - கடிந்தகற்றுதல் | 496 | ஒல்லலன் - பகைவன் | 740 | ஒல்லுவித்தல் - ஊட்டுதல் | 630 | ஒவ்வரும் - ஒப்பற்ற | 242 | ஒளிநிறப் பூந்தளிர் - அசோகந் தளிர் | 1056 | ஒளிபிழம்பிய - ஒளிதிரட்சியுற்ற | 172 |
|
|
|