அருஞ்சொற்பொருள் அகரவரிசை | 1449 |
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
எண் | பக்கம் எண் | ஒளிர்வித்தல் - தோன்றச் செய்தல் | 428 | ஒள்ளியோர் - வேறு கோத்திரத்தில் பிறந்த அறிவுடையோர் | 90 | ஒறாமை - அகற்றாமை | 515 | ஒறுக்கும் - துன்புறுத்தும் | 869 | ஒற்றி - அடித்து | 433 | ஒன்றிய - உடம்பட்ட | 289 | ஓக்கம் - எழுச்சி | 100 | ஓக்கல் - சிந்தல் | 1187 | ஓக்குதல் - ஓச்சுதல் | 713 | ஓகை - உவகை | 45, 274 | ஓங்கல் - மலை | 13, 84 | ஓங்கல்முடி - மலையுச்சி | 589 | ஓசனித்தல் - சிறையடித்துக் கொள்ளுதல் | 122 | ஓச்சி - வீசி | 12, 84,230 | ஓடை - நெற்றிப்பட்டம், நீர்நிலை | 800,957 | ஓட்டந்து விளியும் - ஓடி யொழியும் | 483,589 | ஓட்டம் - உதடு | 521,621 | ஓட்டறு - ஓடிய | 840 | ஓட்டைநெஞ்சு - அறிவுபோய்க் காலியாயுள்ள மனம் | 215 | ஓதி - முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ளும் அறிவு, கூந்தல் | 859,1304 | ஓதியம் - அன்னம் | 1341 | ஓதை - ஒலி | 456 | ஓத்து - நூற்பொருள் | 991 | ஓப்ப - போக்க | 404 | ஓப்பல் - ஓட்டல் | 1204 | ஓப்பி - ஓட்டி | 21,26,297 | ஓப்புதல் - ஓட்டுதல், வெருட்டுதல் | 33,499 | ஓமாலிகை - வாசனைப்பொடி | 1304 | ஓம்படை - பாதுகாவல் | 1210 | ஓம்பல் - ஒழித்தல் | 784 | ஓம்பி - அகற்றி | 578 | ஓம்பிய - ஓம்ப | 317 | ஓம்புதல் - பாதுகாத்தல் | 49 | ஓராங்கு - ஒரு தன்மை | 324 | ஓராழி வையத்தவன் - கதிரவன் | 1096 | ஓரை - விளையாட்டு | 10371223 | ஓர்த்தவர் - ஆராய்ந்தவர் | 183 | ஓர்ப்பு - விருப்பம் | 1086 | ஓலிடல் - முழங்குதல் | 650,1401 | ஓவ அம்பலம் - சித்திரசபை | 95 | ஓவம் - ஓவியம் | 128 | ஓவா - ஒழியாத | 547 | ஓவிய வணக்கம் - ஒழிந்த வணக்கம், அஃதாவது வணக்கமின்மை | 246 | கஃறு - கருமை | 1 | கங்கணம் - காப்புநூல் | 1316 | கங்கு - வரம்பு | 61 | கங்கையாதார சித்தியம் | 182 | கசாக்கிருகம் - வெயில் அறு பதினாறு | 602 | கசேருகத் தீவு | 613 | கசேருகம் - நாரத்தை | 613 | கச்சபம் - யாமை | 1310 | கச்சம் - அளவு | 1354 | கசிவு - இளகுதல், வியர்வை | 10 533 | கஞலும் - நெருங்கிய | 265,335 | கஞற்றல் - நிறைத்தல் | 30 | கஞற்றி - நெருங்கச்செய்து | 51,64,518 | கஞற்றிளர் - ஏந்தியவர், பணிமகளிர் | 1349 | கஞற்றுதல் - நெருங்கக் கட்டுதல், நிறைத்தல் | 263,483 | கஞற்றுநர் - ஏற்றுவோர் | 418 | கஞ்ச நண்பன் - ஞாயிறு | 1309 | கஞ்சம் - வெண்கலம் | 581 | கஞ்சவெற்பு - பிரமன் மலை | 321 | கடகம் - யானைத்திரள், கடக ராசி, ஆடித்திங்கள், காப்பு | 109,301,583,614 | கடக்கும் - வெல்லும் | 46 | கடத்தல் - வெல்லுதல், வேறல் | 15,824 | கடப்பாடு - முறை | 674 | கடப்பினான் - கடப்பமாலையை யுடையவன் | 414 | கடம் - அருநெறி | 347 | கடம்பன் - முருகன் | 239 | கடவுணாயகன் - இந்திரன் | 1357 | கடவும் - செலுத்தும் | 430 | கடவல் - கூறுதல் | 217 | கடவுளர் - அமரர் | 519 |
|
|
|