பக்கம் எண் :

1450தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
கடவுளாப்பி - காமதேனுவின் சாணம் 151
கடறு - காடு 230
கடா - வினா 199
கடாவி - செலுத்தி 20
கடி - அரை 422
கடிகாசலம் - கடிகைமலை 1236
கடிப்பகை - வெண்சிறு கடுகு 1122
கடுகல் - விரைந்து செல்லற்க 1133
கடுகியது - விரைந்தது 342
கடுமுரண் - மிகுந்த வலி 812
கடைக்கணித்தல் - கடைக் கண்ணாற் பார்த்தருள் செய்தல் 426
கடைசிமார் - மள்ளப்பெண்கள்24
கடைப்படுதல் - கீழ்ப்படுதல் 15
கட்டங்கம் - ஒரு மழுப்படை 592
கட்டு - பறித்து, களைந்து24,59
கட்ப - களைய 58
கட்புலம் - கண்ணறிவு 802
கணவரை - நெருங்கிய மலை 1037
கணி - வேங்கை மரம், காலக் கணிதர் 407,1220
கணிகம் - தற்கால வழிபாட்டிற்கு மண் முதலியவைகளால் அமைக்கப்பட்ட தெய்வ வடிவகங்கள், கணம் 188,249,407
கணிக வெற்பு - தணிகைமலை 248
கணிச்சி - பரசு, மழுப்படை கோடரி 22,230,972
கண் - கணு 344
கண்குலாங்களி - கண்ணிடத்துப் பொருகின்ற களிப்பு971
கண்டகை - கண்டகை என்னும் ஆறு 170
கண்டசரம் - கழுத்திலணியும் மாலை 269
கண்டமாலி - கண்டமாலை 551
கண்டனமென்மொழி - கற்கண் டைப் போன்றமொழி 1014
கண்டு - கரடு 622
கண்டூதி - தினவு64
கண்டை - வீரகண்டாமணி 425,497
கண்ண - நினைக்க 293
கண்ணபக்கம் - கிருட்டிண பக்கம் 352
கண்ணா - கருதாத 19
கண்ணிலா - கண்ணோட்ட மில்லாத4
கண்ணிலை - கண்ணோட்ட மில்லை 1099
கண்ணுறல் - சார்த்தல் 1034
கண்தரில் - பார்ப்பின் 1071
கண்படை - உறக்கம் 69
கண்மணிமாலிகை - சிவமணி மாலை 598
கதமலை - யானை 401
கதம் - சினம் 401
கதழ்ந்து - விரைந்து 33,521,713
கதித்த - உயர்ந்த, தோன்றிய, முறுகிய 6,265,1032
கதித்தல் - உயர்தல் 297
கதிய - விரைவையுடைய 60
கதிர்ப்ப - இறுமாந்து 425
கதிர்மாற்றலன் - பானு கோபன் 723
கதிர்வென்றவன் - பானு கோபன் 640
கதுவ - பொருந்த 55
கதை - தடி 526
கந்தமாதனம் - ஒரு மலை 185,608
கந்தம் - சேர்க்கை 646
கந்தவெற்பு - கந்தமாதன மலை 866
கந்தரம் - மலை, குகை 866,1294
கந்தாரம் - ஒருவகைப்பண் 1036
கந்து - தூண் 965
கந்துகம் - குதிரை, பந்து 111,717
கபத்தித் தீவு 613
கபிலை - ஆன்வகைகளில் ஒன்று 474
கபிலேசம் 182
கப்பூரம் - கருப்பூரம் 474
கமடம் - ஆமை 68
கமலத்தேவி - தாமரையாகிய மனைவி 49
கமலப்பாசடை - தாமரையினது பசிய இலை 485
கம் - கம்மியரது தொழில், நீர் 77, 756
கம்பம் - நடுக்கம் 272