பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1451

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
கம்பலை - ஆரவாரம் 53
கம்புள் - சம்பங்கோழி 48
கயந்தலை - யானைக்கன்று 1000
கயம் - தடாகம் 101
கரணம் - சடங்கு 1260
கரத்தல் - மறைத்தல் 957
கரந்தன்று - ஒளித்து 19
கரம் - கழுதை 581
கராளம் - கறுப்பு 605
கரிசு - குற்றம், பழி 4,19,184, 916
கரித்த மணிவடம் - கண்மணி மாலை 265
கருக்கொலை - கருவை யழித்தல் 400
கருஞ்சாந்து - கத்தூரி கலந்த சந்தனம் 86
கருமான் - பன்றி 1007
கருமுச்சி - கரிய நுனி 1146
கருமை - பெருமை 988
கரும்பணி - இராகு 148
கருவித்து - தொகுதியையுடையது 354
கருனை - பொரிக்கறி 269,491
கரை செய்தல் - ஓதல் 504
கரைந்த - திருவாய் மலர்ந்தருளிய 15
கரைந்தனம் - கூறினேம்482
கரைபோக - ஆயுள் முடியுங் காறும் 593
கரைவர் - கூறுவர் 321
கலதி - கலகம், கேடு 311,821
கலவர் - மரக்கலம் ஓட்டுவோர் 87
கலவினார் - கலந்தவர்76
கலவும் வாதனை - கலந்துள்ள வாசனை 179
கலன் - மரக்கலம் 26
கலாபம் - பதினாறுகோவை 16,936
கலாய் - கலந்து 443,677
கலி - துன்பம், கலியுகம் 22
கலிங்கம் - ஆடை 268,1168
கலித்த - எழுந்த, தழைத்த48,50
கலித்திழியும் - ஒலித்திறங்கும் 154
கலுழி - காட்டாறு 2
கலுழ்தல் - விளங்குதல் 1223
கலை - கலைமான், ஆண் குரங்கு 27,407
கலைமான் - ஆண்மான், கலைமகள்
கல் - மலை 206
கல்தலை வணங்கும் - மலையுந் தலைவணங்கும் 522
கல்நகம் - மலை 1216
கல்லாய் - களையாய் 1173
கல்லூரிக் கொட்டில் - கலை பயிலிடம் 106
கவட்டணி - யானைக் கழுத்தில் இடுங் கயிறு 235
கவண் - கிளிகடி கருவி 924
கவந்த மாடல் - தலையற்ற உடற்குறையாடுதல் 670
கவயம் - சட்டை 15,730
கவலை - கவர்த்த வழி 1210
கவவு - அகத்திடுதல் 64
கவற்சி - கவலுதல் 70
கவற்றுவார் - வருத்துவார் 59
கவிகை - குடை 401
கவித்த - சூடிய 304
கவிழ்த்தல் - அழித்தல் 226
கவின்றது - விளங்கியது 16
கவுசிகம் - கடுகு, வெண் கடுகு 581
கவுத்துவம் - ஒரு தெய்வ மணி 1298
கவுரம் - பொன்னிறம் 66
கவுள் - கன்னம் 1038
கவைஇ - அணிந்து 429
கவைக்கோடு - இருபிளவுள்ள கொம்பு 23
கவ்விய - பொருந்திய 1211
கழங்கு - கழற்சிக்காய் 1183
கழலச்செய்தான் - நீங்கச் செய்தான் 753
கழலற்ற - நீங்குதல் அற்ற 44
கழல்பாக்கு - நீக்கும் பொருட்டு 176
கழிப்பி - செய்து, இயற்றி முடித்து 166,482
கழுதிரதம் - கானற்சலம் 289
கழுது - பேய் 1145
கழுமல் - மயங்கல், துன்பம்37,1113
கழுமி - மயங்கி 37
கழுமுதல் - நெருங்குதல் 657