அருஞ்சொற்பொருள் அகரவரிசை
எண் | பக்கம் எண் | கழுமுள் - மழுப்படை | 815 | கழை - கரும்பு, மூங்கில் | 46,1309 | கழைக்கோல் - கருப்பங்கழி | 1158 | கழைப்புனல் - கருப்பஞ்சாறு | 1294 | கழைநீர் - கருப்பஞ்சாறு | 614 | களக்கு - குற்றம் | 560 | களபம் - யானைக்கன்று | 64,1288 | களமர் - உழவர் | 25 | களம் - கழுத்து, குற்றம் | 15,249,1309 | களி - குழம்பு | 1294 | களிபிழம்பு - களிப்புத் திரண்ட | 172 | களைகண் - பற்றுக்கோடு | 223 | கள் - தேன் | 6 | கள்ளம்பு - தேன் | 1036 | கள்ளவம்புயம் - தேனையுடைய தாமரை | 61 | கள்ளுதல் - களவு செய்தல் | 552 | கறாத - சினக்காத | 1078 | கறி - மிளகு, மிளகுக்கொடி | 83,276 | கறுவல் - சினத்தல் | 1229 | கறுவு - சினம் | 226 | கறை - அஞ்ஞானம், உரல் | 2, 325 | கறைக்குடிஞை - குருதியாறு | 830 | கறைதல் - கூறல் | 824 | கறைவிராவிய - இரத்தம் கலந்த | 34 | கற்சிறை - மலையின் சிறகுகள், கல்லாற் செய்யப்பட்ட மதகுகள் | 23 | கற்பசித்து - தணிகைமலை | 409 | கற்பம் - ஊழிக்காலம் | 409,486 | கற்பவேந்தன் - கற்பகச் சோலைக்குரிய இந்திரன் | 47 | கற்றை - கூட்டம் | 6 | கனக்கரிசு - பாரமாகிய தீவினை | 631 | கனல்வதனன் - அக்கினி முகன் | 789 | கனவயவம் - காட்டா | 1045 | கனவல் - கனாக்காண்டல் | 32 | கனற்பிணி - பித்தநோய் | 568 | கனிட்டை - சிறுவிரல் | 911 | கனைத்தல் - ஒலித்தல் | 998 | கன்னபூடணம் - காதணி | 185 | கன்னி - துர்க்கை, தேவசேனை | 27,865 | கன்னியந்துழாய் - இளந்துளசி | 159 | கன்னியிலெடுத்த வோணம் - புரட்டாசித் திருவோணம் | 463 | காக்கைக்கண் - மாறுகண் | 552 | காசிவரைப்பு - காசியின் எல்லை | 383 | காசினி - நிலம் | 787 | காஞ்சி - காஞ்சி மரம், எண் கோவை மணி | 24,936 | காட்சி - தோற்றம் | 42 | காட்டம் - விறகு | 1227 | காதரம் - துன்பம் | 182,260 | காதன்மை - அன்புடைமை | 1047 | காதா - கொல்லாத | 626 | காதி - ஒறுத்து | 311 | காதுதல் - கெடுத்தல் | 464 | காதுதற்பாலவல்ல - ஒறுத்தற்குரியனவல்ல | 245 | காத்திரம் - யானையின் முன்கால்கள் | 411 | காத்திருந்தும் - சோலைகளில் திருந்தும், காத்துக்கொண்டிருந்தும் | 103 | காத்து - தந்து | 411 | காந்தருவத் தீவு | 613 | காமவல்லி - ஒரு பூங்கொடி | 1269 | காமிகாரணியம் | 181 | காம்பு - மூங்கில் | 958 | காயம் - ஆகாயம் | 256 | காய் - வருத்துகிற | 417 | காரண - முகிலைப் பொருந்த | 263 | காரணப்பிரான் - சிவன் | 96 | காரா - காராம்பசு | 591 | காராகிருகம் - சிறைச்சாலை | 274 | காரி - காக்கை, வைரவன் | 80,256 | காரிப்புத்தேள் - ஐயனார் | 50 | கார்கோள் - கடல் | 84 | கார்முகம் - வில் | 731 | காலதர் - பலகணி | 525 | காலம் - காலக்கடவுள் | 990 | காலிறை - காற்றாகிய கடவுள் | 651 | கால் - இயமன் | 651 | கால்கள் - வாய்க்கால்கள் | 47 |
|
|
|