பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1453

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
கால்சீத்தல் - அடியோடு போக்குதல் 55,424
கால்செய்து - வாய்க்காலாக ஓடி 45
கால்பொரும் - காற்றால் மோதுண்ணும் 642
கால்யாத்தல் - கட்டல், பதித்தல் 235,299
கால்வாங்கல் - வளைதல் 936
காவணம் - பந்தல் 1168
காவலன் - கணவன் 871
காவலான் - நந்தி 242
காவற்கருத்தன் - திருமால் 769
காவி - கருங்குவளை 7,188
காவியங்கிரி - திருத்தணிகை 898
காவியத்திரி - காத்திரி 188
காவிவரை - தணிகைமலை 879
காவுவித்தோர் - சுமை சுமக்கச்செய்தோர் 625
காழகம் - கறுப்பு 616
காழி - சீகாழி 1233
காழ் - வயிரம், குற்றம், கருமை 31,215,409
காழ்பணி - சரமாகிய அணிகலம் 269
காழ்ப்பு - மனத்திட்பம் 826
காளம் - கருநிறம் 41
காற்படை - காற்றுப்படை 754
காற்ற - போக்க 672
காற்றினன் - வெளிப்படுத்தினன் 642
காற்றுதல் - தூங்கவிடுதல் 527
காற்றுவல் - நீக்குவேன் 780
கானங்கொள்தரு - காட்டிலுள்ள மரம் 346
கானல் - கடற்கரைச்சோலை 25
கானவாரணம் - காட்டுக்கோழி 89
கான் - மணம், காடு, முல்லை நிலம் 19,37,257
கான்றல் - தொங்குதல் 51
கான்று - வெளியிட்டு 51
கிடங்கு - அகழ் 121
கிடுகு - தேர்மரச்சுற்று 109,153,303
கிடை- கிடத்தல் 46
கிம்புரி - தந்தப் பூண் 109, 169
கிம்புருட கண்டம் 609
கிரகி - இல்லறத்தான் 628
கிரவுஞ்சத்தீவு 614
கிரி - மலை, (ஈண்டுக்) குறிஞ்சிநிலம் 37
கிருச்சிரம் - ஒரு கழுவாய் விரதம் 578
கிரௌஞ்சம் 185
கிழக்கு - கீழ் 12
கிளத்தல் - கூறுதல் 40
கிள்ளை - கிளி, குதிரை 24,717
கின்னரம் - ஒரு பறவை 925
கீண்டு - கிழித்து 30
கீர்த்திபூடணம் 185
கீர்த்திவாசேசம் 182
கீழ்ந்தவன் - பிளந்தவன் 30
கீற்று - பிளந்த 233
குக்கி - வயிறு 644
குக்குடம் - கோழிச் சேவல் 425,637,861
குக்குலு - குங்கிலியம் 474
குசைத்தீவு 614
குஞ்சரம் - யானை 838
குஞ்சி - ஆண்மயிர் 943
குடங்கர் - குடம் 526
குடங்கை - அகங்கை 1164
குடந்தமுற்று - வணக்கஞ் செய்து 242
குடந்தம்பட்டு - வணக்கஞ் செய்து 176
குடிஞை - யாறு 622
குடுமி - வெற்றி 679
குடைதல் - மூழ்குதல் 102
குணங்குதல் - மனத்தடுமாற்றம் 414
குணத்தானம் 181
குணிதம் - மடங்கு 572
குணில் - குறுந்தடி 55
குண்டிகை - நீர்க்கமண்டலம் 428
குதட்டி - வாயிலிட்டு மென்று71
குதூகலம் - மகிழ்ச்சி 305
குந்துருக்கம் - ஒருவகை மணப்பொருள் 474
குப்பாயம் - உடம்புக்கீடு727
குப்புறல் - குதித்தல், தாவுதல் 31,684
குப்பை - குவியல் 761
குமரகோட்டம் 185
குமரித்தீவு 613