பக்கம் எண் :

திருநகரப் படலம்145

பொலிவு பெற்ற பந்தர்கள் (வீதியாகிய) நதியைக் கடக்க உண்டாக்கிய கல்லாலாகிய வழியையொக்கும். அழகைத் தருகின்ற மகரதோரணங்களும், முத்தாலாகிய தோரணங்களும் ஆங்காங்கு நீட்சியுற்று விளங்குதல் மனத்துணிவு பொருந்திய ஆடவர்கள் செல்லுதற்குச் செய்த கொடியாகிய வழியையு மொக்கும்.

(வி - ம்.) விசித்திரம் - விம்மிதம். பந்தர் - எழுவாய். சிலைவழி - கல்லாகிய வழி. துணிவுறுதகையோர் - அக் கொடிவழியிற் செல்லும் மனவுறுதி பொருந்திய தகுதியுடைய ஆடவர்கள். ஆற்றினைக் கடப்பதற்குக் கற்பாலமும் கொடி வழியு முற்காலத்தும் இக்காலத்து முளவாதலின் இங்ஙனம் கூறினார்.

(111)

 நெருங்குதோ ரணத்திற் றூக்கிநித் திலங்க
           ணிலாவொடு குளிர்தவக் கான்று
 வருங்கதி ரிரவி விளர்ப்பவெப் பனுக்கி
           மல்குவான் மீனெனத் தோன்றி
 இருங்கலை மதியோ டுடுவினுக் கொளிமிக்
           கிணக்கியந் தாரகைக் குலத்தோ
 டொருங்கலிற் பொழுது தெரிப்பவே திங்கட்
           குறுத்தினன் கறைகுறை விறையோன்.

(இ - ள்.) நெருங்குகின்ற தோரணத்தின்கட் டூக்கிய முத்துக்கள் ஒளியோடு குளிர்ச்சியை மிகக் கக்கி நாடோறும் வருகின்ற கிரணங்களையுடைய சூரியன் நாணத்தால் வெண்ணிறமாக வெப்பத்தினைக் கெடுத்துப் பொருந்துகின்ற ஆகாயத்தின்கண்ணுள்ள மீன் கூட்டமென்று சொல்லும் வண்ணம் காணப்பட்டுப் பெரிய கிரணங்களையுடைய சந்திரனோடு கூடிய நட்சத்திரங்களைக் காட்டிலும் ஒளிமிகுந்து அவைகளைத் தன்னொளியாற் கலக்கச்செய்து நட்சத்திரக் கூட்டங்களுடனே யொடுங்குதலால் சூரியனிவனென்று பிறர்க்கறிவிக்கவே இறைவன் களங்கத்தையும் கலைக்குறைவையும் சிவபெருமான் திங்களின்மாட்டுச் சேர்த்தான்.

(வி - ம்.) தவக்கான்று - மிகக்கக்கி. விளர்ப்ப - வெண்ணிறமடைய. அனுக்கி - கெடுத்து. ஒருங்கல் - ஒடுங்கல். கறை - களங்கம். குறை - கலைக்குறை. இறையோன் - சிவபெருமான்.

(112)

 சந்திர காந்தச் சிலைகளிற் குயின்ற
           தமனிய மாடமா ளிகைகள்
 இந்துவா னுலவ வுமிழ்ந்தநீ ரருவி
           யிழிதர வெழுபெருங் கொடிகள்
 அந்தில்வார்ந் தசையும் பாடெலாங் கதிர்க்கு
           மவிருடுக் குலந்தவழ் காட்சி
 சிந்துவேய் மணிகள் வரைவயிற் கிடந்து
           திவளொளி காலுவ போன்ற.