பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1467

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
பயம் - பால்19, 44
பயம்பு - யானைபிடிக்கும் பள்ளம் 279, 922
பயன் - பால்50
பயிர்ப்பு - பயிலாத பொருட்கண் உண்டாகும் அருவருப்பு 966
பயில்வது - தங்குவது 82
பயின்ற - தங்கிய43
பயோததி - பாற்கடல்596
பயோதரம் - முடி622, 1192
பரத்தமை - அயலாரிடஞ் செல்லுந் தன்மை 72
பரத்திமார் - நெய்தல்நிலப் பெண்கள்26
பரபோகம் விளைத்தருள் வேந்து - சிவபிரான் 44
பரபோகவமிர்தம் - வீடுபேறு 316
பரம்புதல் - பரவுதல்57
பரம்புவ - விரிந்துகிடப்பன 52
பரர் - ஏனையோர் 52
பரல் - பருக்கைக்கல் 105
பரவமாக்கள் - பரதவர் 26
பரவை - பரப்பு 1300
பராகம் - நோன்புவகை 578
பராரை - பருத்த அடிப்பாகம் 972
பரார்த்தம் - மனிதர்செய்த உருவம் 583
பரானந்தம் - உயர்ந்த இன்பம் 629
பரிசனம் - குற்றேவல் மக்கள் 971, 1288
பரிதி - மூன்றாமேகலை, உருளை 327, 1319
பரித்தல் - தாங்கல் 265
பரிபாகம் - பக்குவம்165
பரிய - வலிய, பெரிய721, 752
பரிவேடம் - திங்களைச் சுற்றியிருக்கும் ஊர்கோள் 125
பருமம் - மூவாறுகோவைமணி, குதிரைக் கல்லணை 105, 936
பருவத்தாழ்வு - போதிய பரி பக்குவமின்மை 564
பருவம் - மலபரிபாகம் 564
பருவரல் - துன்புறுதல் 550
பருவருந் துயர் - வருத்துகின்ற துன்பம் 228
பலாசுறுகோல் - பலாசங்கோல் 623
பலி - அரிசி
பலித்தல் - நடத்தல் 394
பல்கணியாய் - பல கண்களை யுடையதாய் 267
பல்கும் - மிகுதிப்படும் 14
பல்லவம் - தளிர் 1026
பல்லியம் - பலவகை வாத்தியம் 265
பல்லியவோதை - வாத்திய ஒலி 34
பவதிதவனம் - நோன்புவகை 579
பவனம் - கோவில், காற்று 185, 864
பவானி - சங்கரம் 184
பவுதிகன் - மாணியில் ஒரு வகை 577
பவுத்திரம் - தூய்மை 185
பவ்வீப்புழு - மலப்புழு 554
பழங்கண் - துன்பம் 27, 780, 980
பழனச்சூழல் - மருதநிலம் 46, 91
பழுவம் - காடு 1094
பளிங்கு - படிகமணி 1265
பளிங்குவரை - படிகமலை 597
பள்ளி - களஞ்சியம், துயிலுமிடம் 29, 53
பறந்தலை - போர்க்களம்743, 824
பறப்பை - பறவை 159, 394, 529
பறம்புதல் - பரவுதல் 547
பறழ் - குஞ்சு, குட்டி, பார்ப்பு 165, 276
பறைக்கும் - கெடுக்கும் 160
பறைதரு - பறக்கின்ற 234
பறைதல் - கூறுதல் 507
பறைத்தல் - நீக்கல் 980
பறைந்திடுக - கணித்திடுக 583
பறைய - தேய, கெட 342, 415
பனத்தி - பார்ப்பனி 590
பனவன் - பார்ப்பான் 590
பனியுளம் - நடுக்கங்கொண்ட மனம் 219
பனியோங்கல் - இமயமலை 609
பாகடை - பாக்குவெற்றிலை 11
பாகன் - காற்றுக் கடவுள் 852