பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1469

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
பிரமராசலம் 323
பிரமாங்கம் - சங்கிதாமந்திரம் 565
பிரளயாகலர் - இருமலமுடையார் 362
பிரை - பால்தயிராதற்கிடும் மோர்த்துளி 227
பில்குதல் - துளித்தல் 219
பிழம்ப - கூட்டத்தையுடைய 432
பிழி - தேன், கள் 1284
பிழை - தீவினை 596
பிறக்கம் - ஒலி, விளக்கம் 547, 660
பிறக்கிடல் - பின்னிடல் 789
பிறக்கிட்டான் - பின்னாகச் செய்தான் 294
பிறக்குதல் - விளக்குதல் 1262
பிறக்குநர் - பிறங்கச்செய்வோர் 284
பிறங்கல் - மலை 438
பிறழ்தல் - மாறுபடுதல் 18
பிற்றகைய - பின்னர்த் தங்க 317
பின்வருண - வேளாளர்குலம் 591
பின்றை - பின்வாயில் 656
பின்னாள் - தோழி 1243
பின்னி - கூடி 16
பின்னிலை வேட்டல் - பின்னர் நின்று குறைவேண்டல் 1041
பீசம் - விதை 515
பீடகம்பொலிந்த - மனத்திற் பெருமை பொலிவுபெற்ற 192
பீடு - பெருமை 112
பீதம் - பொன்னிறம் 911
பீர்ங்குவீ - பீர்ங்கம்பூ 886
பீலி - சிறுசின்னம் 48, 1328
பீழை - துன்பம் 163, 226
பீள் - கரு 922
புகர் - ஆணவமலம் 228
புகர்மலம் - ஆணவமலம் 356
புகல் - செல்லுதல் 291
புகற்சி - விருப்பம் 736
புகா - உணவு 1143
புகுநர் - புகுந்துள்ளோர் 221
புக்கால் - புகுந்தால் 98
புக்கு - புகுந்து 1
புஞ்சம் - திரட்சி 1142
புடவிமாது - நிலமகள் 882
புட்கரணித்தீவு 614
புட்டில் - விரல்உறை 708
புட்டில் - சுளகு 656
புணர்ப்பு - தொடர்பு 205
புத்தேள் - கடவுள் 430
புய்க்கல் - பெயர்த்தல் 378
புய்த்தல் - பிடுங்குதல் 718
புரசை - யானைக்கழுத்திடுங் கயிறு 109
புரத்துச்சாலிகை - காத்தலையுடைய கவசம் 802
புரந்தரநாமக்குரிசில் - வீரபுரந்தரன் 753
புரந்தரன் - இந்திரன் 17
புரப்பு - காவல் 1403
புரம்பொடித்தவன் - சிவன் 57
புரவு - புரத்தல், காத்தல 185, 225, 428, 1228
புராரிதரும்படை - பாசுபதப் படை 678
புரிநர் - புரிபவர் 483
புருகூதர் - இந்திரர் 756
புருடம் - தற்புருட மந்திரம் 578
புரை - உவமம், உயர்வு 458, 504
புரைகிளைஇ - அருமையாகத் தேடி 278
புரைத்தது - உயர்ந்தது 82
புரைத்தவர் - கீழோர் 1270
புலந்து - புலவிகொண்டு 72
புலம்பிய - தனித்திருந்த 1229
புலம்பு - தனிமை, வருத்தம் 1028, 1142, 1166, 1340
புலர்தல் - கெடுதல் 12
புலவர்கோமான் - இந்திரன் 1322
புலிக்கலை - புலித்தோலாடை 210
புலிங்கம் - நெருப்புப்பொறி 430, 1300
புலோமசைமகள் - தேவசேனை 1323
புல் - புதர் 69
புல்குறி - பொருந்தும் அடையாளம் 14
புல்லிய - சிறிய 1310
புல்லுரை - புல்லிய மொழி 1165
புவிமகன் வாரம் - செவ்வாய்க் கிழமை 1404