ஆகாயத்தின் கண்ணியலும் இராகுகேதுக்கள் அடைகின்ற காலத்து நெருங்குதலால் உடலை மூடிய தோலைக் கழற்றி மாதங்கடோறும் நிலை பெற்ற களிப்பினாற் றுள்ளும். (வி - ம்.) சுருங்கை - சிறுவாயில்; திட்டிவாயில் என்க. நாகம் - ஆகாயம்; இராகுகேதுக்கள். முன்னுகாலை - அடைகின்ற காலத்து. துளும்புறும் - துள்ளும். மதிதோறும் - மாதங்கடோறும். (115) | செம்பொன் வார்கொடி சேணுற நிவந்துகற் பகத்தின் | | வம்பு லாவிய பொன்னகர் மதிற்புறம் புடைப்ப | | இம்பர் மேம்படு மிந்நகர் நிகர்க்கலாற் றாநீ | | உம்பர் வாழ்தலொண் ணாதென வொறுப்பபோன் றனவால். |
(இ - ள்.) செம்பொன்னாலாகிய நீண்ட கொடிகள் ஆகாயத்தைப்பொருந்த எழுந்து கற்பக மரங்களின் வாசனைபொருந்திய தேவருலகத்தின் மதிலைப் புறத்திலே அடிப்பன. இவ்வுலகத்தின்கண் மேம்பட்ட இத் தணிகாசலத்தினுக்கு ஒப்பாகாத நீ தேவருலகத்தி்ன்கண் வாழ்தல் தகாதென்று தண்டிப்பன போன்றனவாகும். (வி - ம்.) நிவந்து - எழுந்து. மதில் - இரண்டாவதன்றொகை. ஒறுத்தல் - தண்டித்தல். (116) | வளியின் யாத்தபொன் னகர்கொடி வைகலுந் துளக்க | | நெளியு நீர்மையா னிலத்திடை விழுமென வஞ்சி | | ஒளிறு வாள்விழி யிரவினும் விழித்துளா ரொத்தார் | | அளிவி ழாமலர்ப் பொலந்தொடை யந்தரத் திமையார். |
(இ - ள்.) வண்டு வீழாத மலர்களாலாகிய மாலையை யணிந்த விண்ணுலகத்தின்கண்ணுள்ள தேவர்கள் வாயுமண்டலத்தால் யாக்கப்பட்ட பொன்னகரானது (தணிகைநகர் மாளிகையிற் கட்டிய) கொடிகள் நாடோறும் அசைக்க நெளிகின்ற தன்மையால் (அந்நகரானது, பூமியின்கண் விழுமென்று பயந்து விளங்குகின்ற ஒளியோடு கூடிய விழிகள் இரவின்கண்ணும் விழித்துள்ளாரை யொத்தனர். (வி - ம்.) வளியாத்த பொன்னகர் - வாயுமண்டலத்தாலியாக்கப் பெற்ற பொன்னகரமானது. நெளியும் நீர்மையினாலே விழித்துளர ரொத்தா ரென்க. துளக்க - அசைக்க. (117) | கன்னி கும்பங்க டாங்கிய வென்றொளி கதிர்க்குங் | | கன்னி கும்பங்க டாழ்ந்துபோங் கனகவா னரங்கில் | | துன்னி மாதரா ராடலிற் சுடர்மணி யுக்க | | மின்னு மீன்விசும் பிகழ்ந்திறை கொண்டமை வீழும். |
(இ - ள்.) பெண்களையும் பொற்குடங்களையும் (மேன்மாடங்கள் தாங்கியன) என்று கருதி கன்னிராசியும், கும்பராசியும் தங்கிச் செல்கின்றன. பொன்மயமாகிய பெரிய சபைகளில் பொருந்திப்பெண்கள் ஆடலினாலே சிந்தினவாகிய ஒளிபொருந்திய மணிகள் ஒளிர் |