கின்ற விண்மீன்கள் ஆகாயத்தினின்றும் நீங்கித் தங்கிய தன்மையை ஒக்கும். (வி - ம்.) கன்னி - பெண். கும்பம் - குடம். கன்னி - கன்னி - என்ற இராசி. கும்பம் - கும்பம் என்ற இராசி. தாழ்ந்துபோம் - தங்கிச்செல்லும். வான் - பெரிய. உக்க - சிந்தினவாகிய மணிகள். வினையாலணையும் பெயர். மீன் - விண்மீன். இகழ்ந்து - நீங்கி. இறை கொண்டமை - தங்கினமை. வீழும் - ஒக்கும். (118) | திகழு மின்னனார் மாடத்து மடுத்தனர் திறப்ப | | அகின றும்புகை சுருங்கையி னிவந்தெழு மாக்கம் | | முகிலுண் கூந்தலார் முகத்தினை மதியென முன்னிப் | | புகுக ரும்பணி யன்மைதேர்ந் தெழுவது புரையும். |
(இ - ள்.) ஆகாயத்திலே விளங்குகின்ற மின்னலையொத்த இடையை யுடைய பெண்கள் மேன்மாடங்களில் அகிற்கட்டையின் நறிய புகையை நிறைத்தவர்களாகிப் பின் திறந்துவிட (அப்புகை) நுழைவாயிலின்கண் ஓங்கியெழுகின்ற உயர்ச்சியானது மேகத்தை யொத்த கூந்தலையுடைய மங்கையர் முகங்களைச் சந்திரனென் றடைந்து (உண்ணப்) புகுகின்ற இராகுவானது (மதியன்மை யறிந்து) எழுவதை யொக்கும். (வி - ம்.) மின்னனார் அகினறும்புகை மடுத்தனர் திறப்ப எனக் கூட்டுக. சுருங்கை - நுழைவாயில். முன்னி - அடைந்து. கரும்பணி - இராகு. அன்மை தேர்ந்து - மதியன்மையைத் தெளிந்து, ஆக்கம் எழுவது புரையுமென வினைமுடிவு செய்க. முகிலுண் கூந்தல் - மேகத்தை யொத்த கூந்தல். உண் - உவமையுருபு. "சேலுண் கண்ணியர்" எனச் (2383) சிந்தாமணியில் வந்துள்ளது காண்க. (119) | சீத ளத்தொடு வெம்மைய திதலைவெம் முலைக்குச் | | சீத ளத்தொடு வெம்மைசெய் தக்கதென் பார்போற் | | சீத ளப்பனி நீர்விராய்ச் சந்தனஞ் செறித்துச் | | சீத ளப்புன லறவிரை புகைப்பராற் றிளைப்போர். |
(இ - ள்.) குளிர்ச்சியோடு வெப்பத்தை யுடையவாகிய தேமலோடு கூடிய தனங்களுக்குக் குளிர்ச்சியோடு வெப்பத்தைச் செய்யத் தக்கதென்பாரைப்போல குளிர்ச்சி பொருந்திய பனிநீரைக் கலந்து சந்தனச் சேற்றை யப்பிக் குளிர்ச்சியாகிய அந்நீர் புலரும்வண்ணம் அனுபவிப்பவராகிய ஆடவர்கள் வாசனைப் புகையை யுண்டாக்குவர். (வி - ம்.) வெம்மைய - முற்றெச்சம். செய்யத் தக்கதென்னும் வினையெச்சத்திறுதி விகாரத்தாற் றொக்கது. "செய்தக்க அல்ல செயக்கெடும்" என்னும் குறளா னறிக. (120) | சித்தி ரம்பல பயின்றுபைங் கிளிமொழி திகழ்ந்து | | மெத்தி ருஞ்சுவை யுணாநிரந் தரித்தெங்கும் விரைத்துத் | | தத்து தென்றல்வந் துலாவுபு தையலார் பயில | | வைத்த மாடமு மவரென வைம்பொறி வாங்கும். |
|