பக்கம் எண் :

திருநகரப் படலம்149

(இ - ள்.) பல சித்திரங்கள் பொருந்திப் பசிய கிளியின் மொழிகள் விளங்கப்பெற்று, நிறைந்த பெரிய சுவையோடு கூடிய சிற்றுணாக்கள் கலக்கப்பெற்று, யாண்டும் வாசனையை யுடைத்தாகித் தாவுகின்ற தென்றற் காற்றினை யனுபவிப்பதற்காகச் சிற்றுலாக் கொண்டு பெண்கள் தங்குவதற்குச் செய்யப்பெற்ற இவ்வரிசைகளும் (தம்மைக்கண்ட ஆடவருடைய ஐம்பொறிகளைத் தம்மிடத்து வாங்கிக்கொள்ளும்) அப் பெண்களைப்போலத் (தம்மைக் கண்டோர்) ஐம்பொறிகளையும் தம் மாட்டிழுத்துக் கொள்ளும்.

(வி - ம்.) கிளி - அம்மாடங்களிலுள்ள பெண்கள் வளர்க்கும் கிளி. பெண்கள் ஐம்பொறி வாங்குதலை "கண்டுகேட் டுண்டுயிர்த்துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணேயுள" என்னும் திருக்குறளானுணர்க. கண்ணாற்கண்டும் செவியாற்கேட்டும் நாவாலுண்டும் மூக்கான் மோந்தும், மெய்யாற்றீண்டியும் அவ் வப்பயனை யனுபவிப்பன தொடியை யுடையாள்கண்ணே யுளவாயினவாறு காண்க.

(121)

 மானி னத்தொடு முயலின மருவும்வண் வடவை
 மேனி புல்லுறு மிடபம்வீழ் பிடிபரி யேறு
 தானி வர்ந்தெழும் வார்கொடி மகரமேற் றாங்கி
 வேனின் மன்னவ னிடமென விளங்குவைப் பெங்கும்.

(இ - ள்.) நீண்ட கொடிகளின் மகரராசியினைத் தாங்கி வசந்த காலத்துக்குரிய மன்மதனதிடமென்று சொல்லும்படி விளங்குகின்ற வைப்பி னெவ்விடங்களினும், மான்சாதிப் பெண்களோடு முயற்சாதியாடவர்கள் சேருவார்கள். குதிரைச்சாதிப் பெண்களோடு இடபச்சாதி யாடவர்கள் சேருவார்கள். விரும்புகின்ற பெண்யானைச்சாதிப் பெண்களோடு குதிரைச்சாதி யாடவர்கள் விரும்பிச் சேருவார்கள்.

(வி - ம்.) இவற்றின் விரிவை யெல்லாம் மாரதந்திரத்துட் காண்க.

(122)

 கற்புக் காட்டிய கைவளர் பசுங்கொடிக் கமழ்ந்த
 கற்புக் கூந்தலர் காவியஞ் செவியினர் கலப்போர்
 பொற்பக் காமநூல் வாதினில் வென்றுபோர் மதன்பால்
 எற்பக் கேவலை யிவையெனப் பறித்துளார் நிகர்த்தார்.

(இ - ள்.) (நாயகர்கள் பிரிந்த காலத்து மன்மத பாணமாகிய முல்லை மலராற் கிடையும், நீலமலராற் சாக்காட்டையு மெய்திய மகளிர் தலைவர்கள் வினைமுற்றி மீண்டபின்னர்) தங்கள் கற்பு நிலைமையைக் காட்டத் தங்கள் கையான் வளர்க்கப்பட்ட முல்லைக் கொடிக் கண்ணே தோன்றி, வாசனையை வெளியிடுகின்ற முல்லைமலரைக் கூந்தலின்கண்ணே சூடி, நீலமலரை அழகிய காதின்கண்ணே செருகித் தங்கள் நாயகரோடு கூடுகின்ற பெண்கள் (முன்ன ரற்றம்பார்த்துத் தம்மை வருத்திய மாரனைப்) பொலிவுபெறக் காமநூற்போரி லவனை வெற்றிகொண்டு அப்போர்த் தொழிலைத் தொடங்கிய மன்மதனிடத்துள்ள முல்லைமலரும் நீலமலருமாகிய இவற்றை இனி என்பக்கம் செலுத்தற்க என்றுகூறிக் கைப்பற்றிக் கொண்டவரை யொத்தார்.