பக்கம் எண் :

1474தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
முகப்புறுதல் - உச்சிமோந்து வாங்கிக் கொள்ளுதல் 923
முகம்பிறக்கிடுதல் - திரும்பி நோக்குதல் 957
முகலி - பொன்முகலி 27
முகவாய் - மோவாய் 475
முக்கணுடையான்படை - பாசுபதக்கணை 734
முக்கியெடுத்து - மூழ்குவித்து எடுத்து 341
முக்தன் - முதல்வன் 453
முசுகுந்தன் - ஓர் அரசன் 865
முச்சி - உச்சிக்கொண்டை 37, 1305
முச்சிகைவேல் - சூலம் 853
முடக்கி - கொக்கி 526
முடலை - திரட்சி 325
முடுக்கர் - முடுக்கு 1253
முட்டாது - முட்டுப்பாடின்றி 589
முட்டு - குற்றம் 12
முட்டுதல் - செறிதல் 760
முண்டகம் - தாழை, தாமரை 24, 26, 75
முதன்மையாதரவு - தலையன்பு 487
முதிர்தல் - நிறைதல் 991
முதிர்மலம் - ஆணவமலம் 563
முதுக்குறைவு - பேரறிவு 11, 860
முதுவரை - சக்கரவாளகிரி 615
முதையல் - உழுத புழுதியுள்ள முல்லை 88
முத்திதன் - நிருவாண தீக்கை யளிக்கும் ஆசிரியன் 587
முந்து - முற்காலம் 1
முந்தை - முன்வாயில் 656
முந்நாண்மதிக்கலை - மூன்றாம் பிறை 1018
முப்பாழ் - இன்பினைக்கடந்து நிற்றல் 377
முயக்கு - கூடுதல் 35
முயங்குதல் - ஒற்றுமைப்படல் 340
முயறி - முயல்வாயாக 1263
முரஞ்சு - முதிர்வு 1299
முரப்புச்சூழல் - பாலைநிலம் 36
முரம்பு - கல்விராய நிலம் 27, 89
முரலும் - பாடும் 274
முராரி - திருமால் 41, 625
முரிதிரை - துணிபடும் அலை 16
முருகு - வாசனை, தேன் 24, 858
முருக்குதல் - கெடுத்தல் 760
முருங்குதல் - கெடுதல், அழிதல் 406, 1243
முருந்து - கொம்பின் அடிப்பாகம் 1031
முழங்குதல் - வழங்குதல் 11
முழவம் - முழவோசை 438
முழவவியம் - மத்தள வாத்தியம் 1002
முழவு - மத்தளம் 151
முழால் - முழக்கல் 1280
முழுத்த - முழுமையான 857, 873
முழுப்ப - முழுதும் 605
முழுமா - பெரிய யானை 1263
முழுவலியிருள் - ஆணவமலம் 1313
முழுவல் - முத்தங்கொடுத்தல் 1192
முளிதயிர் - கட்டித் தயிர் 22
முளிபுல் - காய்ந்த புல் 670
முளையாமுதல்வன் - பிறவா யாக்கைப் பெரியோன் 650
முறுவல் - பற்கள் 426
முற்றவிர் - முன்னர்த் தங்கிய 317
முற்றிய - வளைந்த, கலந்த, அடைந்த 78, 81, 237
முனிவன் - சீற்றத்தை யுடையவன் 219
முனைத்த - கூர்மைபொருந்திய 166
முனைவோன் - சினப்போன் 1331
முன்னார் - நினையார் 545
முன்னுக - செல்லுக 526
முன்னுகாலை - அடைகின்ற காலத்தில் 146
முன்னும் - முற்படும் 113
முன்னுவித்தல் - சேர்த்தல் 76
மூகைமை - ஊமைத்தன்மை 222
மூங்கா - கீரி 438
மூங்கை - ஊமை 137
மூசிய - மொய்த்த 88
மூடிகம் - பெருச்சாளி 325
மூடுரி - மூடிய தோல் 146
மூடையடுக்கு - மூட்டையடுக்கு 156
மூண்ட - முயன்ற 202
மூத்தநூல் - மறை 1317