பக்கம் எண் :

அருஞ்சொற்பொருள் அகரவரிசை1475

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
மூரியங்கலன்கள் - அழகிய கலன்கள் 22
மூர்ச்சனை - மூச்சொடுங்கி நிற்றல் 756
மூலமலம் - ஆணவமலம் 308
மூலம் - முதல், காரணம், கிழங்கு 161, 252, 410
மூலவசலம் - தணிகைமலை 870
மூலாத்திரி - காரணமலை 188
மூவரை - மூன்றுவரி 299
மூவாச்சுதந்தரனார் - சிவபெருமான் 1320
மூன்றுஅயுதம் - முப்பதினாயிரம் 483
மெத்தி - நிறைத்து 26
மெத்திய பாவம் - செய்த தீவினை 523
மெத்திருஞ் சுவை - நிறைந்த பெரிய சுவை 148
மெய்கதுவும் - உண்மைத் தன்மையைப் பொருந்தும் 296
மெய்ப்படுத்தல் - மெய்யின் கண்ணணிதல் 809
மெய்ப்பொருள் - உள்பொருள் 354
மெய்யுருத்தோற்றல் - வெளிப்படுதல் 730
மெலிகலார் - மெலியத்தகாத வர்கள் 14
மெல்குதல் - மெலிதல் 975
மெல்குமவர் - மெலிவடைவோர் 435
மெல்கும் - சுருங்கும் 405
மெல்லிசை - இனிய ஒலி 740
மெல்லென்பொருள் - மென்மைப் பொருள் 1014
மேகலை - ஆடை, வேள்விக் குழியின் சுற்றுச்சுவர், இடையணியில் ஏழுகோவை மணி 99, 299, 936
மேக்கிவர்ந்தார் - மேலே ஏறியவர்கள் 69
மேக்கு - மேல் 18, 84
மேக்குயர்த்தோர் - மேலே உயர்த்திக் கட்டியவர்கள் 168
மேடம் - ஆடு 591
மேதகை - மேலான தன்மை 9
மேதக்கான் - மேன்மை யடைந்தான்
மேதி - எருமை 49
மேதை - அறிவுடைமை இறைச்சி
மேருக்குடாது - மேருவுக்கு மேற்கேயுள்ள 154
மேலான் - நான்முகன் 869
மேவர - பொருந்த 375
மேவரப்பெற்று - அடையப் பெற்று 175
மேவருமகள் - பெறலரு மகள் 1356
மேற்கு - மேலுக்கு 406
மை - முகில் 63
மைத்த - கரிய 56
மைத்தவுருவத்தன் - திருமால் 1284
மைத்து - கறுத்து 289
மைந்து - வலி 201
மையத்திரம் - மோகனக்கணை 60
மையனையான் - உன்மத்தன் 746
மையாத்தல் - மயங்கல், ஒளி குறைதல் 15, 649
மையாந்த - மயங்கிய 291
மைவதனத்தான் - அசமுகன் 721
மொட்டு - பூவரும்பு 285
மொத்துதல் - அடித்தல் 240
மொய்கூந்தல் - செறிந்த கூந்தல் 1
மொய்ம்பு - வலிமை 8
மோகம் மன்னுபடை - மோகனக்கணை 732
மோடு - உயர்ச்சி, பெருமை வயிறு, பருத்த 25, 438, 809, 1014
மோலி - முடி 12, 16, 1095
மௌவல் - முல்லை 90
யவனன் - தச்சன் 765
யவை - ஒருகூலம் 533
யாத்த - கட்டிய 67
யாப்பு - ஊழ்கட்டு 429, 1251
யாமின் - கட்டுங்கள் 1273
யூகம் - கருங்குரங்கு 1288
யூகை - எட்டு இலீக்கை 602
வகிர்நா - பிளவுபட்ட நா 155
வகுத்தறியார் - பகுத்துப் பாராதவர் 32
வங்கம் - மரக்கலம் 344
வ வ வ வ வ வ வ வ