பக்கம் எண் :

1476தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
வஞ்சவடவி - மூங்கிற்காடு 125
வடதலை - வடநாடு 683
வடமாதிரத்தவன் - குபேரன் 137
வடவை - குதிரை 149
வடாது - வடக்கின்கண்ணது 125
வடாரணியம் - திருவாலங்காடு 184
வடி - செப்பஞ்செய்த 233
வடிகோல் - தாற்றுக்கோல் 651
வடித்த நவ்வி - கூரிய கோடரி 29
வட்டு - வட்டுக்காய் 1046
வட்குதல் - நாணுதல் 664
வட்டகை - ஓர் ஏனம் 263
வட்டணை - வட்டமாகச் சுற்றல், அஃதாவது சாரி 751
வட்டித்து - சுழன்று 660
வண்டலாட்டு - விளையாட்டு 923
வண்டல் - மகளிர் விளையாட்டு 1012
வண்மை - வளப்பம், அறிவு வழங்கும் முறைமை 297, 555
வதி - வழி 521
வதிவித்திடுதல் - தங்க வைத்தல் 422
வம் - வருக 1036
வம்பலன் - பகைவன் 707
வம்பு - புதுமை 1033
வயக்கம் - விளக்கம் 18, 66, 168
வயக்கல் - படைத்தல் 297
வயக்களம் - போர்க்களம் 723
வயக்குவான் - விளக்குவான் 248
வயங்குதல் - விளங்குதல் 20, 502
வயமா - சிங்கம் 231
வயமான் - புலி 1048
வயம் - வெற்றி 36
வயலை - மருதநிலத்துள்ள ஒருவகைக் கொடி 86
வயவர் - போர்வீரர் 103, 1235
வயவர்வயவன் - வீரவாகு 819
வயவன் - வீரன் 211
வயிரத்தொடர் - வயிரச் சங்கிலி 333
வயிரம் - நெடுங்காலம் நிகழுஞ் செற்றம் 663
வயிர் - ஊதுகொம்பு 432, 1176
வயின்வயின் - இடந்தோறும் 24
வரண்டி - வாரி 343
வரண்டுதல் - வரன்றுதல் 574
வரதம் - வரங்கொடுத்தல் 425
வரதர் - வரந்தருதற்குரிய சிறப்புடையோர் 517
வரந்தழைத்தோன் - சூரன் 752
வரப்பு - இடம் 325
வரம்பிலார் - கயவர் 88
வரல் - வராதே 1171
வரன்று - வாரிக்கொண்டு 231
வராக நாடு 613
வராஞ்சலம் 184
வரிதல் - சித்திரித்தல் 969
வரித்தல் - எழுதுதல் 1192
வரித்து - வரிசைசெய்து 218
வருகாயமகற்றல் - இனியுளவாங் காயம் போக்கல் 343
வருடம் - கண்டம் 610
வருடைமான் - மலையாடுகள் 31
வருட்டி - தடவுதல்செய்து 1189
வரை - குத்துக்கோல் 346
வரைகீண்டோன் - முருகவேள் 94
வரைத்து - எல்லைசெய்து 594
வரைநாயகன் - குறிஞ்சித் தெய்வம் 1256
வரையுறைகடவுள் - முருகன் 923
வலத்தினர் - வல்லமையுள்ளோர் 299
வலந்து - வலம்வந்து 327
வலவத்தொகை - பாகர் கூட்டம் 754
வலா - வல்லமையில்லாத 108
வலித்தல் - நினைத்தல் 1192
வலித்தும் - கருதுகின்றோம் 1347
வலை - வல்லை 819
வலையன் - வலையால் உயிர் கொன்றோன் 549
வல்சி - உணவு 269
வல்லரண் - வலிய மதில் 13
வல்லா - வலிமையில்லாத 992
வல்லிசை - பறையொலி 740
வல்லுரைவாயினர் - பழி கூறுவோர் 1165
வல்விரைந்து - மிகவிரைந்து 17
வல்விலங்கு - யானை 1187
வழக்கமர்ந்த - வழங்குதல் பொருந்திய 118
வழக்கறு - செலவைத் தடுக்கும் 183