பக்கம் எண் :

1478தணிகைப் புராணம்

அருஞ்சொற்பொருள் அகரவரிசை


  எண்பக்கம் எண்
வானயவனன் - அந்தரத்தார் மயன் 654
வானரமகளிர் - தெய்வப் பெண்கள் 174
வான் - தேவர்கள் (இடவாகுபெயர்) 35
வான்அர - இராகு 1040
வான்வேதம் - உயர்ந்த மறை 381
விக்கிரமசிங்கபுரம் 182
விசயை - கொற்றவை 624
விசாகபவனம் 185
விசாகன் - முருகன் 859
விசிகம் - பாணம், கணை 725, 732
விசும்பிறை - இந்திரன் 1256
விசும்பு - விண் 5
விச்சு - ஞானம், விதை 307, 980
விச்சுவரூபம் - உலகமே வடிவாகத்தோன்றுதல் 126
விஞ்ச - மிகுதியாக 161
விஞ்சுற - மிகுதியாக 77
விஞ்சையர் - வித்தியாதரர் 1000
விஞ்ஞானகலர் - ஒருமல முடையார் 362
விடர் - மலைப்பிளப்பு 327, 1101
விடலி - விடுதல் 955
விடலியர் - தூர்த்தமகளிர் 576
விடுத்து - திறந்து 305
விடைத்தல் - பகைத்தல், மாறுபாடு கொள்ளல் 696, 858
விடைப்பு - பகைத்தல் 15
விடைப்புறுதல் - முனைப்புறுதல் 485, 565
விடையா - மாறுபாடு கொள்ளாத 211
விட்டரம் - ஆசனம் 1317
விட்டிடல் - தங்குதல் 553
விட்டில் - ஒரு பூச்சி 554
விண்டமலர்க்கண் - விரிந்த மலரைப் போன்ற கண் 1216
விண்டலுற்று - நீங்கி 1094
விண்டவர் - பகைவர் 104
விண்டிடாவகை - நீங்காதபடி 113
விண்டு - திருமால், வெடித்து, பாடி 97, 256, 878
விண்ணமாளி - இந்திரன் 1338
விண்ணமிர்து - வேள்வியிற் கொடுக்கும் அவி 316
விண்ணம் - வானுலகம் 167
விதந்த - சிறப்பித்துக் கூறிய 357
விதலை - நடுக்கம் 525
விதானம் - மேற்கட்டி 206, 263, 1267
விது - திங்கள் 1188
விதுக்குறை - பிறைத்திங்கள் 11
விதும்புதல் - நடுங்குதல் 900
விதுர்தனன் 201
வித்தி - சிதறி 21
வித்தியாரணியம் 185
வித்துருமம் - பவளம், இளந்தளிர் 84, 1268, 1346
விந்தம் - ஒரு மலை 613
விபினம் - காடு 183
விபுலம் - ஒரு மலை 608
விமலம் - தூய்மை 492
விமலன்படை - பாசுபதப் படை 755
விம்மல் - வியப்பு 1287
விம்மாந்து - இறுமாந்து 962
விம்மிதம் - புதுமை, வியப்பு, மருட்கை 15, 94, 312, 645, 817, 923
வியங்கொள்ளல் - ஏவல் கொள்ளல் 273
வியங்கோளுறீஇ - ஏவலைப் பெற்று 279
வியத்தகு - அடக்கிநிற்கும், வியப்படையும் 338
வியவர் - ஏவலர், பணியாளர் 517, 1235, 1264
வியாக்கிரேசுரம் - திருப்பாதிரிப் புலியூர் 184
வியாத்தி - சமனிறைவு 562
வியாபகம் - எங்கும் நிறைதல் 546, 562
விரகு - நுண்ணறிவு 168, 225, 248
விரச - சூழ 517
விரசி - கலந்து 1226
விராயது - பொருந்தியது 21
விராய் - கலந்து 3
விரிசிகை - முப்பத்திரண்டு கோவையுள்ள மாதர் இடையணி 936
விரிஞ்சன் - நான்முகன் 224